இது தெரிஞ்சா இனிமேல் உங்க வீட்டு வாசற்படியில் உட்காரமாட்டிர்கள்
குடும்பம் என்பது நம்முடைய முன்னோர்களின் ஆலோசனையும் அறிவுரையும் கேட்டு நடக்கும் ஒரு அழகான சூழல் ஆகும்.அப்படியாக வீட்டில் உள்ள பெரியவர்கள் நமக்கு பல குறிப்புகள் சொல்லுவதும் கத்துக்கொடுப்பதும் உண்டு.அதில் மிக முக்கியமான விஷயம் வீட்டில் வாசற்படியில் அமரக்கூடாது என்பது.
அதிலும் முக்கியமான மாலை விளக்கு ஏற்றும் வேளையில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டு வாசற்படியில் அமர்வதை அவர்கள் எதிர்ப்பது உண்டு.நாமும் அதற்கு காரணம் எதுவும் தெரிந்து கொள்ளாமல் அவர்கள் சொல்வதை சரி என்று கேட்டு கொண்டு நடைமுறைப்படுத்தி கொண்டு இருந்தோம்.
ஆனால் முன்னோர்கள் சில விஷயம் செய்யலாம் செய்யக்கூடாது என்று சொல்வதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கும்.அப்படியாக அவர்கள் வீடு வாசற்படியில் அமரக்கூடாது என்ற சொல்வதற்கு பின்னால் இருக்கும் முக்கியமான காரணத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
பொதுவாக நம்முடைய தலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம். ஒரு வீட்டின் தலைவாசலில் அஷ்டலஷ்மியும் வாசம் செய்வது போல, தலைவாசல் கதவில் குலதெய்வம் குடியிருப்பதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
ஒருவருடைய குலதெய்வம் அவரவர் வீட்டின் கதவில்தான் குடியிருக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் கதவை சத்தமில்லாமல் திறக்கவும், மூடவும் கூறியதோடு அடிக்கடி எண்ணெய்விட்டு சுலபமாக மூடும்படி வைத்திருப்பார்கள்.
குழந்தைகள் கதவின் தாழ்ப்பாளை ஆட்டும் பொழுது பெரியவர்கள் அதை கண்டிப்பதையும் பாத்திருப்போம். மேலும் நாம் கோயிலுக்கு சென்றால் எப்படி வாசல்படியை மிதிக்காமல் தாண்டி உள்ளே செல்கிறோமோ அதேபோல்தான் வீடு என்னும் கோவிலில் வாசல் படிகளை தாண்டி உள்ளே செல்லவேண்டும்.
நம் வீட்டின் நிலைவாசல் படிகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு வழிபடுவதும் இந்த தேவதைகளுக்குதான். அது போல் ஒருபோதும் நிலைவாசல் படியில் அமரக் கூடாது. வீட்டின் தலை வாசலில் மகாலட்சுமிகளும், கதவில் குலதெய்வமும் வாசம் செய்வதால் அந்த இடத்தில் தலை வைத்து படுக்கக் கூடாது, அது போல் தலைவாசலில் கால் வைத்து நிற்கக் கூடாது.
அங்கு நின்று தும்முவது, தலை வாருவது போன்றவற்றை செய்யக்கூடாது. இதுபோன்ற சில தவறுகளை வீட்டில் செய்தால் வீட்டில் பண தட்டுப்பாடு கஷ்டம் நஷ்டம் உண்டாகும்.மேலும் நம்முடைய துன்பம் அனைத்தும் சமயங்களில் வந்த வழி தெரியாமல் போனதற்கு காரணமும் குலதெய்வம் தான்.
ஆக குல தெய்வம் குடி இருக்கும் நிலை வாசற்படியில் ஒரு சில முக்கியமான விஷ்யங்களை கடைபிடிக்க வீட்டில் சந்தோசம் பெருகி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |