கர்ப்பிணி பெண்கள் குலதெய்வம் கோயிலுக்கு செல்லலாமா?
ஒரு பெண் கர்ப்பம் அடைகிறாள் என்பது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மிக பெரிய சந்தோஷத்தை கொடுக்கும்.அந்த வேளையில் அவர்களுக்கு பிடித்த உணவுகள் சமைத்து கொடுத்து,குடும்பத்தினர் அவர்களை மிகவும் சந்தோஷமாக வைத்துக்கொள்வார்கள்.
மேலும்,கர்ப்பிணி பெண்கள் அவர்கள் கர்ப்ப காலத்தில் சில விஷயங்களை செய்யலாம்,சில விஷயங்கள் தவிர்க்க வேண்டும் என்று நம் முனோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.அப்படியாக காலம் காலமாக கர்ப்பிணி பெண்கள் குலதெய்வம் கோயிலுக்கு செல்ல கூடாது என்று சொல்வதுண்டு.நாம் இப்பொழுது அதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக கர்ப்பகாலத்தில் ஒரு பெண் கருவுற்ற முதல் மாதத்தில் குலதெய்வ வழிபாடு செய்யலாம்.2வது மாதத்தில் சூரியன் வழிபாடும், 3-வது மாதத்தில் சந்திரன் வழிபாடும், 3-வது மாதத்தில் சந்திரன் வழிபாடும், 4-வது மாதத்தில் செவ்வாய், 5-வது மாதத்தில் புதன், 6-வது மாதத்தில் குரு, 7-வது மாதத்தில் சுக்கிரன், 8-வது மாதத்தில் சனி வழிபாடும், 9வது மாதத்தில் மறுபடியும் குலதெய்வ வழிபாடும் செய்யலாம்.
இருந்தாலும் சங்க காலத்தில் கர்ப்பிணி பெண்கள் கோயிலுக்கு செல்லக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.காரணம் அந்த காலகட்டத்தில் சரியான போக்குவரத்து வசதிகள் இல்லை,கோயிலுக்கு செல்லவேண்டும் என்றால் வெகு தூரம் நடந்து செல்லவேண்டும்.
இவ்வாறான சூழல் கர்ப்பிணி பெண்கள் பயணம் செய்யும் பொழுது அவர்கள் உடல் உபாதைகள் ஏதேனும் ஏற்பட வாய்ப்புள்ளது.ஆதலால் கர்ப்பிணிகளை கோயில்களுக்கு செல்ல வேண்டாம் என்றார்கள்.
ஆனால் காலம் மாற எல்லா வசதிகளும் உருவான சூழ்நிலையில் கர்ப்பிணி பெண்கள் எல்லா மாதங்களிலும் கோயிலுக்கு செல்லலாம் என்ற சூழல் மாறியது.மேலும் ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பிணிகள் இருக்க கூடாது என்று சொல்லுவார்கள்.
அவ்வாறு இருவரும் ஒருவர் முகம் ஒருவர் பார்க்கும் பொழுது யாராவது ஒருவரின் குழந்தையின் ஆரோக்கியத்தில் பிரச்சனைஉண்டாக வாய்ப்புள்ளது என்று சொல்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |