கன்னி தெய்வத்தின் படங்களை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாமா?
கிராமப்புறங்களில் கன்னி தெய்வ வழிபாடு இன்றளவும் தொடர்ந்து காணப்படும் முக்கிய வழிபாடு ஆகும்.நாம் இந்த கன்னி தெய்வத்தை முறையாக வழிபாடு செய்து வர நம்முடைய வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகும்.அப்படியாக பலருக்கும் இந்த கன்னி தெய்வங்களுடைய படத்தை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாமா?கூடாத என்று சந்தேகம் இருக்கும்அதை பற்றி பார்ப்போம்.
நம்முடைய பூஜை அறையில் சுவாமி படங்களுடன் கட்டாயமாக கன்னி தெய்வங்களுடைய படத்தை வைத்து வழிபாடு செய்யக்கூடாது.பொதுவாக நம் வீட்டில் உள்ள பெண்கள் 30 வயது முடியும் திருமணம் ஆகாமல் இறந்தால் அவர்களை தான் கன்னி தெய்வமாக வைத்து வழிபாடு செய்வோம்.
அவ்வாறு கன்னி தெய்வ வழிபாடு செய்ய ஒரு குறிப்பிட்ட நாள் அன்று கன்னி மூலையில் அவர்கள் படத்தை வைத்து அவர்களுக்கு பிடித்த உணவுகள், உடைகள், பெண்கள் என்றால் பாவாடை தாவணி,சேலை, வளையல், குங்குமம், மஞ்சள், பூ ஆகியவை, பிடித்தமான விரும்பக்கூடிய பல பொருட்களை வைத்து வணங்குவது முறையாகும்.
அதுவே ஆண் கன்னி தெய்வமாக இருந்தால் வேட்டி, துண்டு மற்றும் லாகிரி வஸ்துக்கள், மது, சுருட்டு ஆகியவற்றையும் வைத்து வணங்குவார்கள்.
ஆக இவ்வாறு கன்னி தெய்வ வழிபாட்டை முறையாக செய்து வர நிச்சயம் அவர்களின் பரிபூர்ண அருளால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தடங்கல் இல்லாமல் நடைபெறும்.அதுவே கன்னிதெய்வத்திற்கு சரியான முறையில் வழிபாடு செய்யவில்லை என்றால் காரிய தடங்கல் வருவதை காணமுடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |