சுப நிகழ்ச்சிகளில் கருப்பு நிற ஆடை அணியலாமா?
பொதுவாக இந்து மத சாஸ்திரத்தில் வண்ணங்கள் நம்முடைய வாழ்க்கையில் மிகவும் நெருங்கிய தொடர்புடையது. அதில் மிகவும் எதிர்மறை ஆற்றல் கொடுக்க கூடிய வண்ணமாக கருப்பு நிறம் பார்க்க படுகிறது.
அதனால் பலரும் சுப காரியங்கள் செய்யும் வேளையில் இந்த கருப்பு நிற ஆடையை தவிர்ப்பார்கள். அப்படியாக, நாம் சுப நிகழ்ச்சிகளில் கருப்பு நிற ஆடை அணியலாமா? கூடாதா? என்று பார்ப்போம்.
ஜோதிட சாஸ்திர ரீதியாக கருப்பு நிற ஆடைகளை சுபநிகழ்ச்சிகளில் அணிவதை தவிர்க்கவேண்டும் என்று சொல்கிறார்கள். மேலும், இந்துக்களின் முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல், தசரா, ரக்ஷா பந்தன் போன்ற புனிதமான பண்டிகைகளில், மக்கள் பிரகாசமான வண்ண ஆடைகளை அணிய விரும்புகிறார்கள்.
மேலும் கருப்பு நிறத்தை அணிவதைத் தவிர்க்கிறார்கள். அதே போல் கோயில் அல்லது சுப காரியம் செல்லும் பொழுதும் கருப்பு நிற ஆடைகளை பலரும் தவிர்த்து விடுகிறார்கள். காரணம், கருப்பு நிறம் பொதுவாக துக்கத்துடன் தொடர்புடையது.
இந்து மதத்தில் கருப்பு என்பது தீய சக்தியைக் குறிக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால், நாம் திருஷ்டி நீங்க கருப்பு நிறமே பயன் படுத்துகின்றோம். அவ்வாறு செய்வது ஏற்புடையது என்றாலும் முடிந்த அளவில் கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது நமக்கு நேர்மறை ஆற்றலை பெற்று கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |