ஜோதிடம்:இறந்தவர்களின் ஆடையை குடும்பத்தினர் அணியலாமா?
நம்முடைய இந்து மதத்தில் ஒரு உயிருக்கு இறப்பு என்பது கிடையாது.காரணம் அனைத்து உயிர்களுக்கும் மறு பிறவி இருக்கிறது என்று நம்பப்படுகிறது.ஆக ஒருவர் மரணித்த பிறகு பல்வேறு வழக்கங்கள் கடைபிடிக்க படுகிறது.
மேலும் ஒருவர் இறந்த பிறகு அவருடைய பொருட்களை குடும்பத்தினர் பயன் படுத்தலாமா?அவர்களின் ஆடையை என்ன செய்வது?நாம் அணிந்து கொள்ளலாமா?என்ற சந்தேகம் இருக்கும்.அதை பற்றி பார்ப்போம்.
நம்முடைய சாஸ்திரத்தில் இறந்தவர்களின் ஆடையை ஒரு போதும் அணியக்கூடாது என்று சொல்லுவார்கள்.முக்கியமாக இறந்தவரின் உடல் நம்மை விட்டு போனாலும்,அவர்களின் நினைவுகள் என்றும் நம்மை விட்டு விலகுவதில்லை.
அப்படி இருக்கும் நேரத்தில் நாம் இறந்தவர்களின் ஆடையை அணியும் பொழுது மனதை சோர்வடையச் செய்யும்.அன்றாட வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.எனவே, இறந்தவரின் ஆடைகளை அணிவதைத் தவிர்ப்பது நல்லது.இதை தான் ஜோதிடமும் அறிவுறுத்துகிறது.
அதற்கு பதிலாக ,நாம் இறந்தவர்களின் ஆடையை தானமாக வழங்கலாம்.அவ்வாறு தானம் செய்யும் பொழுது இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையும் என்று நம்பப்படுகிறது.
மேலும்,தானம் என்பது ஒரு நல்ல செயல்.அவ்வாறு செய்யும் பொழுது வாங்கி கொள்ளும் மனிதனின் மனமும் மகிழ்ச்சி அடையும்.ஆக இறந்தவர்களின் பொருளை முடிந்த வரை தானம் வழங்குவது சிறந்த செயலாக அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |