மகர ராசிக்காரர்கள் எந்த தோழில் செய்தால் கோடீஸ்வரர் யோகம் கொடுக்கும்

By Sakthi Raj Oct 10, 2026 10:58 AM GMT
Report

ஜோதிட ரீதியாக சனி பகவானின் ஆதிக்கத்தை கொண்ட மகர ராசியினர் கடின உழைப்பாளிகள். அந்த வகையில், இவர்களுக்கு எந்த தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை கொடுக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

மகர ராசிகாரர்களுக்கு பொதுவாக கட்டமைப்பு, தொழில் நுட்பம் மற்றும் நிர்வாகம் சார்ந்த துறைகளில் சிறந்து விளங்க கூடிய வாய்ப்புகள் உள்ளது. மேலும், இவர்களுக்கு கட்டுமானத்துறை, கட்டிடம் கட்டுதல், சிசிடிவி நிறுவுதல் போன்ற தொழில்கள் அதோடு கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விடுவது போன்ற தொழில்களும் இவர்களுக்கு மிகவும் ஏற்றவையாக இருக்கிறது.

இவர்கள் தொழில் துறை உற்பத்தி என்று வருகின்ற பொழுது நுணுக்கமான உதிரி பாகங்கள் தயாரித்தல், சிஎன்சி இயந்திரங்களை இயக்குதல் மற்றும் தொழிற்சாலை பராமரிப்பு பணிகள் ஆகியவையும் சிறப்பான பலன்களை கொடுக்கும்.

எந்த முருகன் கோவிலுக்கு சென்றால் என்ன பலன் என்று தெரியுமா ?

எந்த முருகன் கோவிலுக்கு சென்றால் என்ன பலன் என்று தெரியுமா ?

மேலும், இயந்திரங்களை பராமரிக்கும் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்வதும் நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும்.

இருப்பினும் இவர்கள் தொழில் துவங்கியவுடன் மிகுந்த பொறுமையை கையாள்வது அவசியம். திடீரென ஒரு மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் இவர்கள் அந்த இடத்தில் ஒரு தோல்வியே சிந்திப்பார்கள். கடினமான உழைப்புகளை பல ஆண்டு காலம் இவர்கள் போடுகின்ற பொழுது நிச்சயம் அவர்கள் போட்ட உழைப்பிற்கு பல மடங்கு இவர்கள் பலனை பெறலாம்.

இவர்கள் தொழில் என்று வருகின்ற பொழுது உணவுத் தொழிலை தவிர்ப்பது நல்லது. சந்திரன் ஏழாம் வீட்டுக் உடையவர் என்பதால் கலை, நடிப்பு, ஓவியம் போன்ற படைப்பாற்றல் துறைகளிலும் இவர்கள் நல்ல சிறந்து விளங்கலாம்.

மேலும், மகர ராசியினருக்கு எந்த தொழில் கோடீஸ்வர யோகத்தை பெற்றுக் கொடுக்கும் என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம். 

 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US