வாஸ்து: இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் பண கஷ்டம் விலகிவிடுமாம்
பண கஷ்டம் என்பது பணம் படைத்தவர்களாலும் ஏதோ ஒரு கால சூழ்நிலையில் சந்திக்கக்கூடிய கட்டாயம் மற்றும் கடினமான காலம் ஆகும். மேலும், பண கஷ்டம் வரும் பொழுது நாம் தேவைக்காக கடன்கள் வாங்கி அவை கெட்ட காலத்தின் தாக்கத்தால் அதிக அளவில் பெருகி விடுவதை நாம் பார்க்கலாம்.
அந்த வகையில் கெட்ட காலம் வந்துவிட்டால் பணக்கஷ்டம் வருவதும் தெரியாது அதனால கடன் பெருகி இருப்பதையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. அப்படியாக பண கஷ்டம் விலக நாம் செய்ய வேண்டிய பரிகாரம் பற்றி பார்ப்போம்.
பொதுவாகவே இந்து மத சாஸ்திரத்தில் ஏலக்காய் என்பது மிகவும் மங்களகரமான பொருளாக பார்க்க முடிகிறது. ஏலக்காய் மகாலட்சுமி அம்சமாக போற்றப்படுகிறது. அந்த வகையில் மூன்று ஏலக்காயை கையில் எடுத்துக் கொண்டு உள்ளங்கையில் வைத்து மூடிகொண்டு பிரச்சனைகள் நீங்க வேண்டுமென்று மகாலட்சுமி தாயாரை வணங்கி நவகிரக யந்திரத்திற்கு அருகில் ஏலக்காயை வைத்துவிட வேண்டும்.
இவ்வாறு செய்யும் பொழுது பண கஷ்டத்தின் தாக்கம் குறைந்து கடன் சுமையும் குறையும். அதேபோல் வீடுகளில் எதிர்மறை ஆற்றல்கள் சூழ்ந்திருந்தாலும் பண பிரச்சனையும் பொருளாதார நெருக்கடிகளும் வரும்.
அதில் இருந்து விடுபட 5கற்பூரம், 5 கிராம்பு, 5 ஏலக்காய் சேர்த்து வைத்து அதில் இருந்து வரும் புகையை வீடு முழுவதும் காட்டினால் வீடுகளில் சூழ்ந்து இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை சக்திகள் உண்டாகி நம்முடைய கெட்ட காலங்களை குறைத்து நன்மை உண்டாக்கும்.
அதைப்போல் வெளியே செல்லும் பொழுது நம்முடைய சட்டை பைகளிலும் பர்ஸில் ஏலக்காய் வைத்துக் கொள்ளலாம். இவை நாம் வெளியே செல்லும் பொழுது நமக்கு பாதுகாப்பாக அமைகிறது. காரணம் ஏலக்காயிடமிருந்து வரும் நறுமணம் நமக்கு புத்துணர்ச்சியையும் தேவையில்லாத வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் நம்மை நிதானம் செய்கிறது.
பொதுவாக நம்முடைய மனம் சரியாக அமைந்து விட்டால் பல விஷயங்களை நாம் தடுத்து நிறுத்தி விடலாம். அதனால் ஏலக்காயை நாம் கைகளில் வைத்துக் கொண்டு வெளியே செல்லும் பொழுது அந்த நறுமணத்தால் மனம் எப்பொழுதும் தெளிவாக இருக்கும். ஆதலால் நாம் வரும் பல பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







