சாணக்கியர் நீதி: இந்த 4 செயல்கள் ஒருவரிடம் இருந்தால் கவனமாக இருங்கள்
நம்முடைய வரலாற்றில் சாணக்கியர் மிகவும் தந்திரமான மற்றும் மிகவும் புத்திசாலியான ஒரு நபராக இருக்கிறார். இவர் மக்களுக்கு அரசியல், குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை என்று பல சூழலுக்கு ஏற்ப இவர் நமக்கு ஒரு அற்புதமான அறிவுரையையும் வாழ்க்கை பாடத்தையும் சொல்லி இருக்கிறார்.
அப்படியாக நம்மை சுற்றி பல போலி நபர்கள் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. அந்த வகையில் நாம் ஒருவர் நம்மிடம் போலியாக நடந்து கொள்கிறார் என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது? என்பதை பற்றி சில விளக்கங்கள் சொல்லி இருக்கிறார் அதை பற்றி பார்ப்போம்.

1. எப்பொழுதும் ஒருவர் பேசக்கூடிய வார்த்தையை காட்டிலும் அவர் செயல்தான் அவர் யார் என்பதை நம்மிடம் நிரூபிக்கிறது. அதாவது எளிதாக ஒரு வசனங்களை பேசிவிடலாம். ஆனால் ஒரு இக்கட்டான நிலை இன்று வரும் பொழுது அந்த நபர் நம்முடன் எவ்வாறு பழகுகிறார் என்பதை வைத்து தான் அவர் உண்மையில் நம்முடன் நட்பாக இருக்கிறாரா அல்லது நேரத்திற்காக பழகுகிறாரா என்பதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள முடியும்.
2. மேலும், ஒருவர் பணம் இருப்பவரிடம் எவ்வாறு பழகுகிறார் பணம் இல்லாதவரிடம் எவ்வாறு பழகுகிறார் என்பதை நாம் மிகவும் கவனமாக பார்க்க வேண்டும். எல்லாரையும் சமமாக நடத்துகிறாரா என்பது மிகவும் முக்கியம். அந்த ஒரு நடவடிக்கைகள் நாம் அந்த நபரின் உண்மை குணத்தை காட்டி விடும்.
3. ஒரு மனிதனுடைய சிரிப்பு என்பது அவன் மனதில் இருந்து வரக்கூடிய ஒரு அழகான விஷயம் ஆகும். ஒருவர் உண்மையாக இருக்கிறார் என்றால் அவருடைய சிரிப்பை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாகவும் மிகவும் குழந்தைத்தனமாக இருக்கும்.
ஒருவருடைய சிரிப்பு அந்த நபர் எப்படிப்பட்டவர் என்பதை பற்றி மிகத் தெளிவாக சொல்லிவிடும். போலியாக சிரிக்கிறார்கள் என்றால் அவர்களால் மனம் விட்டு சிரிக்க முடியாது. ஆக ஒருவருடைய சிரிப்பை நாம் மிகவும் கவனமாக கவனிப்பது நன்மை அளிக்கும்.

4. ஒருவர் பிறரை பற்றி உங்களிடம் எவ்வாறு ஒரு சில கருத்துக்களை எடுத்து வைக்கிறார் என்பதை பற்றி பார்க்க வேண்டும். அதாவது அவர்களை சுற்றி உள்ளவர்களை பற்றியே ஒருவர் உங்களிடம் குறை சொல்கிறார் என்றால் கட்டாயமாக அந்த நபர் உங்களைப் பற்றியும் பிறரிடம் குறை சொல்வதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
ஆக, இவ்வாறான ஒரு விஷயங்களை ஒருவரிடம் பார்க்கும் பொழுது நாம் அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டுமே தவிர அவர்களை முழுமையாக ஒதுக்கி வைத்து விட வேண்டும் என்பது இல்லை. இதைத்தான் பகவத் கீதையில் கிருஷ்ண பகவான் சொல்கிறார் "எந்த ஒரு மனிதன் மிகவும் தெளிவாக இந்த உலகத்தை அணுகுகிறானோ அவனுடைய செயல்கள் மிகவும் புத்திசாலித்தனமானதாக இருக்கும்" என்று.
அதனால், நாம் பிறருடைய செயல்களை உன்னிப்பாக கவனிப்பதால் அவர்களை நாம் எப்பொழுதும் எடை போட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது அல்ல. அவர்களிடம் நாம் எவ்வாறு பழக வேண்டும்? எந்த நிலையில் இருந்து அவர்களை அணுக வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொண்டு உறவு முறையை இனிமை ஆக்குவதற்கான ஒரு செயல் ஆகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |