பொதுவாக சாணக்கிய நீதி என்பது நம்முடைய வாழ்க்கையோடு மிகுந்த தொடர்பு கொண்டது. அதாவது, ஒரு மனிதனின் அரசியல், நிர்வாகம், சமூகம், பெண்கள், நட்பு, எதிரிகள், கல்வி, செல்வம், தர்மம் போன்ற பல விஷயங்களைப் பற்றி அதில் மிக தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது.
அப்படியாக, ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் நட்பு என்பது மிக மிக முக்கியமானதாகும். தாய், தந்தை, உறவினர்கள் கணவன், மனைவி என்று இவர்களிடம் மனம் விட்டு பகிர்ந்து கொள்ள முடியாத விஷயத்தை கூட நாம் நண்பர்களிடம் பகிர்ந்து ஆறுதல் பெற்று கொள்ளலாம்.
அந்த வகையில் உண்மையான நட்பு எவ்வாறு கண்டறிவது? என்று சாணக்கிய நீதியில் நமக்கு சொல்லப்பட்டு இருக்கிறது. அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
நல்ல நட்பை தேர்வு செய்வது என்பது நம்முடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கு சமம். பழகும் எல்லோரையும் நாம் நண்பர்கள் என்று சொல்லி விட முடியாது. நட்பு என்பது மிக மிக புனிதமான ஒன்று.
அவை நம்மிடம் எதையும் எதிர்பாராமல் பகிர்ந்து கொள்ளும் உறவாகும். அப்படியாக, வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் பொழுதும், திடீர் உடல் உபாதைகள் ஏற்பட்டு படுக்கையில் இருக்கும் பொழுதும், எதிரிகளால் ஆபத்துகள் உண்டாகும் பொழுதும், நெருங்கிய சொந்தம் இறந்து தனியே தவிக்கும் பொழுதும் எந்த ஒரு நபர் நம்முடனே இருக்கிறார்களோ அவர்களே உண்மையான நண்பர்கள் ஆவார்கள் என்று சாணக்கிய நீதியில் சொல்லப்பட்டு இருக்கிறது.
சிலர் நம்முடன் அவர்களின் பொழுதை கழிப்பதற்கே என்று பழகுவதுண்டு. அப்படியானவர்கள் நமக்கு ஏற்படும் துன்பத்திற்கு ஆறுதல் வார்த்தைகள் கூட சொல்ல தயக்கம் காட்டுவார்கள். கஷ்ட காலத்தில் மிக எளிதாக அவர்கள் நம்மை விட்டு விலகி செல்வார்கள்.
பிறகு நம் பிரச்சனை முடிவு பெற்று எப்பொழுது இயல்பு நிலைக்கு திரும்புகின்றமோ அப்பொழுது அவர்கள் நம்முடன் மீண்டும் இணைந்து கொள்ள முயல்வார்கள். அவர்களிடம் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எந்த ஒரு நண்பன் எதையும் யோசிக்காமல் நம்முடன் துன்ப காலத்தில் உடன் பயணிக்கிறார்களோ அவர்களே உண்மையான நட்பு ஆவார்கள். சமீபத்திய ஆய்வுகளின்படி, நல்ல நண்பர்களை வைத்திருப்பவர்கள் நீண்ட காலம் வாழ்வதாக சொல்லப்பட்டு இருக்கிறது.
மேலும், நல்ல நண்பர்கள் நம்மை சுற்றி இருக்கும் பொழுது நமக்கான மன அழுத்தம் குறைவாக இருக்கும். அதனால் சாணக்கிய நீதி கொண்டு நல்ல நட்பை தேர்வு செய்து வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழ்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |