புத்தாண்டில் பணக்காரராக மாறுவது எப்படி? சாணக்கியரின் கூற்று
சாணக்கியர் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் ராஜதந்திரி ஆவார்.
பலரும் தங்கள் வாழ்க்கையில் சாணக்கியரின் நெறிமுறைகளை பின்பற்றுகின்றனர்.
அந்தவகையில், புத்தாண்டில் பணக்காரராக மாறுவது எப்படி என்று சாணக்கியர் கூறிய கூற்றை பார்க்கலாம்.

சாணக்கியரின் கூற்று
எந்த வேலையைத் தொடங்குவதற்கு முன்பும், அதை நன்கு ஆய்வு செய்து திட்டமிட வேண்டும்.
வாழ்க்கையில் வெற்றிபெற தன்னம்பிக்கை அவசியம். அதேபோல், சொந்த திறமையில் நம்பிக்கை வைப்பது அவசியம்.
நிதி தொடர்பான புத்தகங்களைப் படித்து, புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது முக்கியம்.
வெற்றியை தடுக்கும் தடைகளை உடைப்பது அவசியம்.
நண்பர்கள், கூட்டாளிகள், சக ஊழியர்களுடன் நல்ல உறவைப் பேணுவது அவசியம். இதன்மூலம் புதிய வேலைவாய்ப்பு கிடைக்க உதவும்.
சோம்பலைத் தவிர்ப்பது அவசியம். ஏனெனில் சோம்பல் வெற்றியின் மிகப்பெரிய எதிரி.
செல்வத்தை சேமிப்பதற்காக மட்டும் பயன்படுத்தாமல், அதை வளர்ப்பதற்கும் நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்த வேண்டும்.
தவறான பழக்கங்களைத் தவிர்ப்பது அவசியம். தீய பழக்கவழக்கங்கள் மற்றும் கவனக்குறைவு உங்கள் செல்வத்தை அழிக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |