ஆண்கள் தான் வீடுகளில் விளக்கு ஏற்றுகிறீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்
நம்முடைய இந்து மதத்தில் காலை மாலை நேரங்களில் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு செய்வது வழக்கம். அப்படியாக, சில நேரம் வீடுகளில் பெண்கள் விளக்கேற்ற முடியாத நிலை வரலாம். அந்த நேரங்களில் ஆண்கள் விளக்கேற்றுவார்கள் அல்லது ஆண்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து வேலைக்காக தொலைதூரமாக ஒரு இடத்தில் இருக்க நேரும்.
அப்பொழுதும் அவர்கள் வீடுகளில் விளக்குகளை வாங்கி வைத்து விளக்கேற்ற கூடிய நிலை இருக்கும். அப்படியாக ஒரு வீட்டில் ஆண்கள் விளக்கு ஏற்றக்கூடிய நிலை இருந்தால் அவர்கள் என்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
குடும்பத்தில் பெண்கள் இருக்கின்ற சமயத்தில் அவர்கள் தான் விளக்கேற்ற வேண்டும். அவர்கள் ஏற்ற முடியாத நிலை வரும்பொழுது தான் ஆண்கள் விளக்கேற்றலாம். அப்படியாக ஆண்கள் வீடுகளில் விளக்கேற்றும் பொழுது மேல் சட்டையை அணியாமல் தீபம் ஏற்ற வேண்டும்.

ஆனால் இவர்கள் தவறியும் லுங்கி அணிந்து மட்டும் தீபம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் பெண்கள் விளக்கேற்றும் பொழுது எவ்வாறு அவர்கள் நெற்றியில் குங்குமம் இருக்க வேண்டும் என்று ஐதீகம் உள்ளதோ, அதை போல் ஆண்கள் விளக்கேற்றும் பொழுது வெறும் நெற்றியாக இல்லாமல் விபூதி சந்தனம் குங்குமம் வைத்துக் கொண்டு விளக்கேற்ற வேண்டும்.
சில வீடுகளில் ஆண்கள் குளித்த கையோடு ஈரத்தலையோடும், ஈரத் துண்டோடும் அவர்கள் பூஜை அறைக்கு சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். அவ்வாறு எந்த காலத்திலும் விளக்கேற்ற கூடாது.

அதேபோல் ஆண்கள் தீபம் ஏற்றும் பொழுது கிழக்கு பார்த்தவாறு தான் தீபம் ஏற்ற வேண்டுமே தவிர மற்ற திசைகளில் தீபம் ஏற்றுவதை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும்.
ஒரு வீட்டில் ஆண்கள் விளக்கு ஏற்றுகிறார்கள் என்றால் அந்த தீபத்தை எக்காரணத்தில் கொண்டும் பெண்கள் சென்று குளிர வைக்க கூடாது. ஆண்கள் ஏற்றிய தீபத்தை ஆண்களும் குளிர வைக்க கூடாது. தீபம் தானாக எண்ணெய் தீர்ந்து குளிர்வது எந்த தவறும் இல்லை என்று சொல்லப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |