சாணக்கிய நீதி: மனிதர்கள் ஒருபொழுதும் இந்த 2 விஷயங்களுக்கு தயக்கம் காட்டவே கூடாதாம்

By Sakthi Raj Nov 10, 2026 01:00 PM GMT
Report

 சாணக்கியர் ஒரு சிறந்த சிந்தனையாளர், பொருளாதார நிபுணர் மற்றும் ராஜா தந்தரியாக திகழக்கூடியவர். இவர் எழுதிய சாணக்கிய நீதி என்கின்ற நூலில் ஒருவர் வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடிய பல்வேறு கருத்துக்களையும் தத்துவங்களையும் எடுத்துரைக்க கூடியதாக அமைந்திருக்கிறது.

அந்த வகையில், அவர் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ஒரு சில முக்கியமான தருணங்கள் ஏற்படுகின்ற பொழுது அதில் ஒரு தயக்கமும் பின்வாங்குதலோ கூடாது என்று சொல்கிறார்கள். அதனை எப்போதும் துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும்.

அப்பொழுது தான் நாம் வெற்றி அடையலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்க. அந்த வகையில், சாணக்கியர் மனிதர் ஒரு குறிப்பிட்ட 2 விஷயங்களுக்கு எப்பொழுதும் தயக்கம் காட்டக்கூடாது என்று சொல்கிறார். அதைப் பற்றி பார்ப்போம்.

சாணக்கிய நீதி: மனிதர்கள் ஒருபொழுதும் இந்த 2 விஷயங்களுக்கு தயக்கம் காட்டவே கூடாதாம் | Chanakya Niti Never Hesitate For Two Things

பகவத் கீதை: பயம் உங்கள் முடிவுகளைத் தடுக்கிறதா? கிருஷ்ணர் கூறும் முக்கிய அறிவுரை

பகவத் கீதை: பயம் உங்கள் முடிவுகளைத் தடுக்கிறதா? கிருஷ்ணர் கூறும் முக்கிய அறிவுரை

1. வறுமை:

ஒவ்வொரு மனிதனும் எந்த குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்பது அவர்கள் கையில் இல்லை. ஆதலால், எளிமையான குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் அதற்காக ஒரு பொழுதும் வெட்கப்படத் தேவையில்லை என்றும் நாம் இருக்கின்ற நிலையை புரிந்து கொண்டு அதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்று அவர் எடுத்துரைக்கிறார்.

ஆகையால், ஒருவர் வறுமையில் பிறந்திருந்தாலும் தொடர் முயற்ச்சியாலும், கடின உழைப்பாலும் மிகப்பெரிய அளவில் செல்வந்தர் ஆக உயர்த்திக் கொள்ள முடியும் என்றும் அவர் சொல்கிறார்.

சாணக்கிய நீதி: மனிதர்கள் ஒருபொழுதும் இந்த 2 விஷயங்களுக்கு தயக்கம் காட்டவே கூடாதாம் | Chanakya Niti Never Hesitate For Two Things

அதிகப்படியான யோசனையால் மனக்குழப்பமா? பகவத் கீதை சொல்லும் எளிய வழி

அதிகப்படியான யோசனையால் மனக்குழப்பமா? பகவத் கீதை சொல்லும் எளிய வழி

2. உணவு.

ஒருவர் உணவு சாப்பிடுகின்ற பொழுது எப்பொழுதும் தயக்கம் காட்டக்கூடாது என்கிறார் சாணக்கியர். காரணம் உணவுதான் ஒரு மனிதனுக்கு தேவையான ஆற்றலை வழங்க கூடியதாக இருக்கிறது.

உணவு சாப்பிடுகின்ற பொழுது தயக்கமும் கூச்சமோ இல்லாமல் வயிறு நிறைவாக சாப்பிடுவது முக்கியம் என்றும் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தயக்கமின்றி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.  

Disclaimer:

இது சாணக்கிய நீதியின் பொதுவான விளக்கத்தின் உள்ள கருத்துக்கள். மருத்துவம் அல்லது நிதி ஆலோசனை அல்ல. உங்களின் தனிப்பட்ட முடிவுகளுக்கு சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US