உங்கள் தலைவிதி மாறுகிறது என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்
இந்த உலகத்தை இயக்கிக்கொண்டு இருப்பது தலை விதிஎன்று தான் சொல்ல வேண்டும். தலை விதி என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அதை நாம் மாற்ற முடியுமா என்று கேட்டால் நிச்சயம் இறை வழிபாட்டால் முடியும்.
இருந்தாலும் இறைவழிப்பாடும் நம்முடைய விதியின் தாக்கத்தை குறைக்கவே அருள் புரியுமே தவிர்த்து நாம் அனுபவிக்க வேண்டிய கர்ம வினையை கட்டாயம் அனுபவித்தாகவேண்டும் என்பது தான் விதி.
அப்படியாக, நாம் அனுபவித்தாக வேண்டிய கர்ம வினைகள் முடியும் பொழுது தான் நம் குடும்பத்தில் நடக்கூடிய மாற்றங்களை நாம் காண முடியும். அந்த வகையில் நம்முடைய தலை விதி மாறுகிறது என்பதற்கான 10 அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.
1.ஒரு குழந்தை ஒரு குடும்பத்தில் பிறக்கின்றது என்றால் அந்த குழந்தை குடும்பத்தின் கரம்வினைகளை அனுபவித்தாக வேண்டியது அதன் கடமை.
அப்படியாக, எப்பொழுது அந்த குடும்பத்தின் கர்மவினைகளும் பாவங்களின் தாக்கமும் குறைகிறதோ அப்பொழுது அந்த குடும்பத்தின் தலை விதி மாறத் தொடங்கும். குடும்பத்தில் நல்ல விஷயங்கள் தடை இல்லாமல் நடக்க தொடங்கும்.
2. உங்கள் கர்மவினைகள் முடியும் பொழுது நீங்கள் அதிகம் பிறரிடம் பேசுவதை நிறுத்திவிடுவீர்கள்.
3. இந்த உலகக்தில் நீங்கள் மீண்டும் புதிதாக பிறந்த உணர்வு தோன்றும்.
4. நீங்கள் எதிர்பாராமல் விலை உயர்ந்த பொருட்கள் உங்களை தேடி வரும்.
5. நீண்ட காலமாக உங்களிடம் இருந்த கெட்ட பழக்கத்தை கைவிடுவீர்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடுப்பீர்கள்.
6. தீயவர்களை எளிதில் உங்களால் அடையாளம் கண்டுக் கொள்ள முடியும். அவர்களை விட்டு விலகி விடுவீர்கள்.
7. விதி மாறும் நேரம் உலகத்தின் மாயை விலகி ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள்.
8. எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் அதை சமாளிக்க இந்த பிரபஞ்சம் உங்களுக்கு துணை நிற்க ஒருவரை கொண்டு வந்து சேர்க்கும்.
9. விதி மாறும் பொழுது உங்களை அறியாமல் நீங்கள் சிவபெருமான் மீதும் பெருமாள் மீதும் அதிக பக்தி கொள்வீர்கள்.
10. தினமும் காலையில் ஒரு குறிப்பிட்ட ஒரு நேரத்தில் தூக்கம் நீங்கி, கண் விழிப்பீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







