எந்தந்த ராசி பெண்களுக்கு எப்படிப்பட்ட குணம் இருக்கும்
மேஷம்:
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் நேர்மறை ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்கள் நேரத்திற்காக பொய் சொல்வதும்,நடிப்பதும் வராத விஷயம்.பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசி பெண்களுக்கு இயர்கையாவே கொஞ்சம் திமிர் அதிகம் இருக்கும்.ஆனால்நெருக்கம் கொண்டார்கள் என்றால் நமக்காக எதையும் செய்வார்கள்.பிறர் நலனில் மிகவும் அக்கறை செலுத்துபவர்கள்.
மிதுனம்:
மிதுன ராசி பெண்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.ஆனால் மிகவும் குழப்பவாதிகள்.எதையும் தெளிவாக முடிவு எடுக்க இயலாது.இவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவதிலும்,நடிப்பதிலும் வல்லமை படைத்தவர்கள்.குறுகிய மற்றும் மிகவும் நெருக்கமான நண்பர்களை வைத்து கொள்ளவே விரும்புவார்கள்.
கடகம்:
கடக ராசி பெண்கள் தைரியமும்,தன்னம்பிக்கையும் கொண்டவர்கள்.எதையும் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கை இருக்கும்.அதே போல் அமைதியானவர்கள்.எளிதில் நம்பி ஏமாற்றம் அடையக்கூடியவர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசி பெண்களுக்கு இயற்கையாகவே தான் என்ற எண்ணம் ஆதிக்கம் இருக்கும்.தலைமை பண்பு அதிகம் கொண்டவர்கள்.பிறரிடம் நன்றாக பேசினாலும் உள்ளுக்குள் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள்.உதவி என்று கேட்டால் கடன் வாங்கியாவது செய்வார்கள்.
கன்னி:
கன்னி ராசி பெண்கள் மிகவும் குழப்பவாதிகள்.மனதில் நம்பிக்கை இருந்தாலும் நம்மால் இதை சாதிக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்.எதையும் எளிதாக புரிந்துகொள்ள கூடிய கணிக்க கூடியவர்கள்.
துலாம்:
துலாம் ராசி பெண்கள் எல்லோரிடமும் சமமாக பழகுவார்கள்.இவர்களுக்கு கலை துறையில் அதிக ஆர்வம் இருக்கும்.எல்லோரிடத்திலும் உண்மை அன்பை காட்டுவார்கள்.முன் கோபம் கொண்டவர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி பெண்கள் அவர்களின் வாழ்க்கை துணைக்காக எதையும் செய்வார்கள்.இவர்கள் நட்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.ஏதேனும் இன்னல்கள் வந்தால் உதவி செய்ய தயங்கமாட்டார்கள்.
தனுசு:
தனுசு ராசி பெண்கள் மிகவும் அமைதி ஆனவர்கள்.ஆனால் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.மனதில் தைரியமும் இறைசிந்தனையும் அதிகம் கொண்டவர்கள்.குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொண்டவர்கள்.
மகரம்:
மகர ராசி பெண்கள் எதையும் பல முறை யோசித்து செயல்படுவார்கள்.இவர்கள் நீண்ட நாள் ஒரு உறவில் இருப்பார்கள்.இவர்களை நம்பி எந்த வேலையும் கொடுக்கலாம்.நம்பி விட்டால் ஏமாற்ற மாட்டார்கள்.
கும்பம்:
கும்ப ராசி பெண்கள் சமுதாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள்.இவர்கள் அதிக நண்பர்களை வைத்து கொள்ள விரும்புவார்கள்.
மீனம்:
மீன ராசி பெண்கள் மிகவும் புத்திசாலியானவர்கள்.இவர்களை பிறரை மதிப்பிடுவதில் துல்லியமாக இருப்பார்கள்.நல்ல எண்ணமும் உயர்ந்த சிந்தனையும் கொண்டவர்கள்.இவர்களுக்கு இயல்பாகவே பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |