சனிக்கிழமை பிறந்தவர்களின் வாழ்க்கை தொழிலில் குணம் எப்படி இருக்கும் தெரியுமா?

By Sakthi Raj Jun 02, 2026 10:26 AM GMT
Report

பொதுவாக, சனிக்கிழமைகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை விடவும் மனதிலும் அறிவிலும் முதிர்ச்சடைந்தவர்களாக இருக்கிறார்கள். சனிக்கிழமை சனி பகவானுக்கு உரிய தினம் என்பதால் இவர்கள் ஒழுக்கம் கட்டுப்பாடு போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள்.

அதை போல் சனிபகவானும் இவர்களை ஒரு நல்ல மனிதராக செதுக்குவதற்கு சில போராட்டங்களும் சவால்களையும் கொடுப்பது உண்டு. சனிக்கிழமைகளில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளியாக இருப்பதோடு இவர்கள் எந்த ஒரு விஷயமும் நீண்ட உழைப்பிற்கு பிறகு தான் நமக்கு கிடைக்கும் என்று நம்பக் கூடியவர்கள்.

இவர்கள் எல்லா விஷயங்களையும் கவனமாக கவனிக்க கூடியவர்களாக இருந்தாலும் அவ்வளவு எளிதாக வெளிப்படையாக பேசாதவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் பொய் சொல்வது தவறான வாக்குறுதிகள் கொடுப்பது போன்றவை பிடிப்பது இல்லை.

சனிக்கிழமை பிறந்தவர்களின் வாழ்க்கை தொழிலில் குணம் எப்படி இருக்கும் தெரியுமா? | Characterstics Of Person Born On Saturday

2026: 12 ஆண்டுகளுக்கு பிறகு தனது உச்ச வீட்டிற்கு செல்லும் குரு.. 12 ராசிகளுக்கும் எப்படி உள்ளது?

2026: 12 ஆண்டுகளுக்கு பிறகு தனது உச்ச வீட்டிற்கு செல்லும் குரு.. 12 ராசிகளுக்கும் எப்படி உள்ளது?

மேலும், சனிக்கிழமையில் பிறந்தவர்கள் ஒரு அங்கீகாரம் மிக்க மற்றும் தலைமை பொறுப்புகளில் அமர்வதற்கு இவர்கள் கடின உழைப்பின் வழியாகவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் கிடைக்கின்ற வேலை இவர்களுக்கு நிரந்தரமாக கிடைக்கிறது. காலம் கடந்து கிடைத்தாலும் இவர்களுக்கு கிடைக்கின்ற வேலை நிரந்தரமாக கிடைக்கக் கூடியதாக இருக்கிறது.

காதல் மற்றும் திருமணம் என்று வரும் பொழுது சனிக்கிழமையில் பிறந்தவர்கள் ஒரு நபரின் வார்த்தைகளை கவனிப்பதை விட அவர்கள் செயலை தான் இவர்கள் அதிக அளவில் கவனிக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இவர்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையிலும் ஒரு அழகான கட்டமைப்பு எதிர்பார்க்கிறார்கள். ஆக, சனிக்கிழமையில் பிறந்தவர்கள் மற்றவர்களை விட அதிக அளவில் ஞானத்திலும் அனுபவத்திலும் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கை மெதுவாக நகர்வது போல் இருந்தாலும் நிலையானதாகவும் பெயர், புகழ் அழியாததாகவும் இருக்கிறது. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US