நீங்கள் மிதுன ராசி லக்னத்தில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கை முழு பலன் இதோ
ஜோதிடத்தில் புதன் பகவானின் ஆதிக்கத்தை கொண்ட மிதுன ராசி மற்றும் மிதுன லக்னக்காரர்கள் அவர்கள் வாழ்க்கை குணம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். மிதுன ராசிக்காரர்கள் இயல்பாகவே காதல் மன்னர்கள் என்று சொல்லலாம்.
இவர்கள் ஒரு இடத்தில் பேசுகிறார்கள் என்றால் தவிர்க்க முடியாத அளவிற்கு அவர்களுடைய பேச்சு அமையும். இவர்களுக்கு கவிதை, ஓவியம், கலை ஆகிவை ரசிப்பது என்றால் மிகவும் பிடித்தமானது. இவர்களுடைய பலம் இவர்களுடைய பேச்சாக இருந்தாலும் இவர்களுடைய பேச்சு இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் சிக்கலை கொடுத்து விடுகிறது.
இவர்களால் நெருங்கியவர்களிடம் எதையும் அவ்வளவு எளிதாக மறைக்க முடியாது. அதைப்போல் இவர்கள் மிகவும் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். இந்த சுதந்திரமான குணம் இவர்களுக்கு காதல் வாழ்க்கையில் சில குழப்பங்களை கொடுத்து விடும்.
திருமண வாழ்க்கை இன்று வருகின்ற பொழுது இவர்களுடைய வாழ்க்கை துணைக்கு இவர்கள் மிகுந்த ஆறுதலாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கை துணையின் கனவுகளை நிறைவேற்றுவதில் இவர்கள் சிறப்பானவர்களாக விளங்குவார்கள்.
மேலும், இவர்களுடைய திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய பெருமாள் மற்றும் தாயார் வழிபாடு மற்றும் திருக்கல்யாண உற்சவங்களில் அன்னதானம் செய்வது இவர்களுக்கு சிறந்த பலன்களை கொடுக்கும்.
மேலும், மிதுன ராசி மற்றும் மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |