தேங்காய் நெய் தீபம் ஏற்ற செல்வ வளம் அருளும் சிவன் கோயில்
ஒரு மனிதன் எவ்வளவு தான் நல்லவனாக இருந்தாலும், அவன் கையில் பணம் காசு இல்லை என்றால் அவனை இந்த உலகம் மதிக்காது. இதுதான் நிதர்சனமான உண்மை.
நீங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது, உங்க சொந்த பந்தங்கள் கூட நெருங்கி வராது. காரணம் இவன் கஷ்டத்திற்கு, எங்கே நம்மிடம் பணத்தை கேட்டு விடுவானோ என்று பயம்.
எப்படியாவது இந்த பணத்தை சம்பாதித்து விட வேண்டும். சம்பாதித்த பணத்தை வீட்டிலேயே தங்க வைக்க வேண்டும்.
சேமிப்பை உயர்த்த வேண்டும். நாமும் மற்ற பணக்காரர்களைப் போல கார் பங்களா என்று வாழ வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால், இந்த எளிமையான ஆன்மிகம் சொல்லும் பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள்.
உங்கள் வீட்டில் இருக்கும் வறுமை சீக்கிரமாக நீங்கி, பணத்தடை விலகி, வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக செல்வம் சேர தொடங்கி விடும். வீட்டில் இருக்கும் வறுமையை விரட்டி அடிக்க கூடிய அந்த பரிகாரத்தை பற்றிய விரிவான தகவலை தெரிந்து கொள்வோமா.
வறுமை விலக பரிகாரம் பொதுவாகவே எந்த ஒரு வீட்டில் காலை 1 மணி நேரம் மாலை 1 மணி நேரம் நல்லெண்ணெய் ஊற்றிய விளக்கு ஏற்றப்படுகிறதோ, அந்த வீட்டில் வறுமை தாங்காது. இது நிதர்சனமான உண்மை.
வீட்டில் இருக்கும் பெண்கள் கட்டாயம் இதை கடைபிடிக்க வேண்டும். வீட்டை குப்பைத்தொட்டியாக போட்டுவிட்டு இந்த வழிபாட்டை மேற்கொண்டால் நிச்சயம் பலன் தராது.
வீட்டைக் கூட்டி அழுக்கு துணிகளை துவைத்து, வீட்டை ஒதுக்கி வைத்து சுத்தம் செய்த பிறகு தான் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். நாம் எல்லோர் வீட்டிலும் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கு நிச்சயம் இருக்கும்.
ஒவ்வொரு வீட்டு பூஜையறையிலும் வெள்ளி விளக்கு, பித்தளை விளக்கு, தங்க விளக்கு இருந்தாலும், மண்ணில் செய்யப்பட்ட விளக்கை ஏற்றி வைப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு.
பூஜை அறையில் அரிசி மாவில் நட்சத்திர கோலம் வரைந்து விடுங்கள். ஸ்டார் கோலம். இரண்டு முக்கோணங்களை சேர்த்து போட்டால் ஸ்டார் கோலம் வந்துவிடும். இது முருகனுக்கு உகந்த கோலமாக சொல்லப்பட்டுள்ளது.
இதில் அருங்கோணங்கள் இருக்கிறது. பச்சரிசி மாவில் ஸ்டார் கோலம் போட்டுவிட்டு, அதற்கு நடுவே ஒரு மண் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி முருகப் பெருமானை மனம் உருகி வேண்டிக் கொண்டால், உங்கள் வீட்டில் இருக்கும் வறுமை குறைந்து செல்வ வளம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
மிக மிக எளிமையான பரிகாரம்தான்.
தினமும் இந்த விளக்கை ஏற்ற வேண்டும். கோலம் கலையாத வரை அது அப்படியே இருக்கட்டும். வாரம் ஒரு முறை அந்த கோலத்தை எல்லாம் சுத்தமாக சுத்தம் செய்து விட்டு, புது கோலம் போட்டால் போதும். மண் அகல் விளக்கில் எப்போதும் போல தீபம் ஏற்றி வைத்துவிட்டு வழிபாடு செய்யுங்கள்.
வழிபாடு இவ்வளவுதான் அந்த அருங்கோணத்தில் இந்த தீப ஒளியின் வெளிச்சம் பிரகாசமாக பட, உங்களுடைய வீட்டில் வறுமை என்னும் இருள் நீங்கி பிரகாசமான செல்வ வளம் அதிகரிக்க தொடங்கும்.
இதையும் படிக்கலாமே: தொழிலில் வெற்றியடைய மந்திரம் தற்சமயம் தீர்க்க முடியாத பணக்கஷ்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் கடன் சுமையால் அவதிப்படுகிறீர்கள் எனும் பட்சத்தில் இன்றைக்கு இந்த வழிபாட்டை வீட்டில் தொடங்கி விடுங்கள்.
இந்த விளக்கை ஏற்றிய 5 நாட்கள், அல்லது 11 நாட்களுக்குள் உங்கள் பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வை அந்த முருகப்பெருமான் காட்டிக் கொடுப்பான். எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறவும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |