கடன் பிரச்சனை தீர கொப்பரை தேங்காய் வழிபாடு
கடன் பிரச்சனை என்பது சிலருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை. சிலரை கடனை அடைப்பதற்காக கடுமையாக முயற்சி செய்வார்கள்.
ஆனால் எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் கடனை அடைக்க முடியாமல், கடன் பிரச்சனையுடன் போராடிக் கொண்டிருப்பார்கள்.
இப்படிப்பட்டவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்து வந்தாலே கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை பெற முடியும்.
இந்த பரிகாரத்தை அமாவாசை முடிந்து வரும் முதல் சனிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். தொடர்ந்து மூன்று சனிக்கிழமை செய்ய வேண்டும்.
காலை 9 மணிக்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்து முடித்து விட வேண்டும். இந்த பரிகாரத்திற்கு ஒரு கொப்பரை தேங்காய், எள், சர்க்கரை வேண்டும்.
கொப்பரை தேங்காயின் மேல் சிறிய ஓட்டை போட்டு அதற்குள் பாதி அளவு கருப்பு எள்ளையும், பாதி அளவு சர்க்கரையும் சேர்த்து அந்த தேங்காய் முழுவதும் நிரப்பிவிட வேண்டும்.
பிறகு அதை மூடி அருகில் இருக்கும் அரச மரத்தடியில் ஒரு சிறிய பள்ளத்தை தோண்டி அதற்குள் இந்த கொப்பரை தேங்காயை வைத்து மூடிவிட வேண்டும்.
அடித்து அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் கடுகு எண்ணெயை ஊற்றி பஞ்சு திரிகளை எண்ணெயில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
பின் அந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து சனி சாலிமா மந்திரத்தை சொல்ல வேண்டும். ஒரு முறை மட்டும் சொன்னால் போதும். பிறகு வீட்டிற்கு திரும்பி விடலாம்.
இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது உணவுகள் எதையும் உண்ணாமல் இருக்க வேண்டும். வீட்டிற்கு வந்த பிறகு உணவு எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பித்த நாளிலிருந்து தினமும் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்யும் பொழுது சனி சாலிமா மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |