நாளைய ராசிபலன்(23-08-2026)

Report

மேஷம்:

வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு நற்செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

ரிஷபம்:

தேவையில்லாமல் ஒருவரிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். நெருங்கியவர்களால் ஒரு சில மனக்கசப்புகள் ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.

மிதுனம்:

தொழில் ரீதியாக நீங்கள் ஒரு முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு தள்ளப்படுவீர்கள். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும்.

லக்னத்தில் கேது இருப்பவர்கள் மிகுந்த புத்திசாலியாகவும் அதிர்ஷ்டமாகவும் இருப்பார்களாம்

லக்னத்தில் கேது இருப்பவர்கள் மிகுந்த புத்திசாலியாகவும் அதிர்ஷ்டமாகவும் இருப்பார்களாம்

கடகம்:

பொருளாதார ரீதியாக சில ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள். வியாபாரம் தொடர்பாக நீங்கள் முக்கிய நபரின் ஆலோசனை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்..

சிம்மம்:

இன்று உங்களுடைய நட்பு வட்டாரங்கள் விரிவடையும். அரசியல் தொடர்பாக முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். தாய் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு. நன்மையான நாள்.

கன்னி:

திருமணம் தொடர்பான விஷயங்களில் கவனமாக பேசுவது அவசியம். உடன் பிறந்தவர்களால் ஒரு சில மன கசப்புகளை சந்திக்கலாம். உண்மையை புரிந்து கொள்ளும் நாள்.

துலாம்:

வெளிநாடு தொடர்பான விஷயங்களில் உள்ள தடைகள் விலகும். ஒரு சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். அத்தை வழி உறவுகளால் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும்.

விருச்சிகம்:

இன்று யாரிடமும் உங்களுடைய வாழ்க்கை மற்றும் குடும்ப ரகசியத்தை பகிர்ந்து கொள்ளாதீர்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். மனசோர்வு நீங்கும்.

இந்த அமைப்பு கொண்ட ஜாதகருக்கு படிப்பை விட அதிர்ஷ்டமும் யோகமும் கை கொடுக்குமாம்

இந்த அமைப்பு கொண்ட ஜாதகருக்கு படிப்பை விட அதிர்ஷ்டமும் யோகமும் கை கொடுக்குமாம்

தனுசு:

பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நினைத்த இடத்தில் இருந்து பணம் கைகளுக்கு வந்து சேரும். பூர்விக சொத்தில் உள்ள பிரச்சனை விலகும்.

மகரம்:

நீங்கள் நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசுவீர்கள். பொருளாதார விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். முக்கிய நபரின் அறிமுகம் பெறுவீர்கள்.

கும்பம்:

வழக்கு விஷயங்களில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையை அனுசரித்து செல்வது அவசியம். மதியம் மேல் நற்செய்தி வந்து சேரும்.

மீனம்:

இன்று உங்கள் மனதில் உள்ள பாரம் குறையும். எதிர்பார்த்த காரியம் நடக்கும். பிள்ளைகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US