நாளைய ராசி பலன்(12-12-2025)
மேஷம்:
சிந்தனையில் தெளிவு பிறக்கும் நாள். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் பெறுவீர்கள். ஒரு சிலர் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நன்மை தரும். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம்:
உங்கள் நண்பர்களிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். வாழ்க்கை துணையிடம் முக்கியமான விஷயங்களை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள். கவனம் தேவை.
மிதுனம்:
உங்கள் மனதில் திருமண வாழ்க்கை தொடர்பான குழப்பங்கள் உண்டாகலாம். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டை குடும்பத்துடன் செய்வீர்கள்.
கடகம்:
கடன் பிரச்சனை விலகும் நாள். வங்கி ரீதியாக சந்தித்த பிரச்சனைகள் விலகும் நாள். தாய் மாமன் வழி உறவால் சந்தித்த சிக்கல் விலகும் நாள். குழந்தைகளின் நலனில் அக்கறை தேவை.
சிம்மம்:
முடிந்தவரை வியாபாரத்தில் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்ய வேண்டாம். வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது முழு கவனம் தேவை. இறைவழிபாடுகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள்.
கன்னி:
மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உங்களின் மறைமுக திறமை வெளிப்படும். சிலருக்கு திருமண தொடர்பான பேச்சுக்களால் சில சங்கடம் உண்டாகலாம்.
துலாம்:
உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை செய்துக் கொள்வீர்கள். ரகசியமான விஷயங்களை நீங்கள் பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். நன்மையான நாள்.
விருச்சிகம்:
சிலருக்கு மதியம் மேல் எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரலாம். உங்கள் காதல் வாழ்க்கையில் சந்தித்த சங்கடம் விலகும். தந்தை உடல் நிலையில் முழு அக்கறை செலுத்த வேண்டிய நாள்.
தனுசு:
பிள்ளைகளின் உடல் நிலையில் அக்கறை தேவை. உங்களின் தவறுகளை நினைத்து வருந்துவீர்கள். உங்கள் தாய் வழி உறவால் நீங்கள் சில சங்கடம் சந்திக்க நேரலாம். கவனம் தேவை.
மகரம்:
தற்பெருமை பேசுவதை தவிர்க்கலாம். தொழில் ரீதியாக நீங்கள் மிக பெரிய உயர்வை பெரும் நாள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பம்:
எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். வரவு செலவில் நிதானமுடன் செயல்படுவது அவசியம். எதிர்பார்த்த பணம் இழுபறியாகும்.
மீனம்:
உங்கள் பிள்ளைகள் மீது அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். உங்கள் உடல் நிலையில் அக்கறை செலுத்துவது அவசியம். வங்கி தொடர்பான விஷயங்களில் சில சங்கடம் சந்திக்க நேரலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |