நாளைய ராசி பலன் (15-04-2026)

Report

மேஷம்:

உடலில் சோர்வு உண்டாகும். வியாபாரம் தொடர்பாக கூடுதல் பொறுப்புகள் வரலாம். வேலையில் உங்களுடைய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். வெற்றி கிடைக்கும் நாள்.

ரிஷபம்:

இன்று எதிர்காலம் குறித்து சிந்தனைகள் உருவாகும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள்.

மிதுனம்:

உங்களுடைய இனிமையான பேச்சால் மக்களின் மனதை கவர்ந்து விடுவீர்கள். விவசாய பணிகள் செய்பவர்களுக்கு நல்ல லாபமான நாள். சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.

கடகம்:

இன்றைய எதிர்பார்த்த சில வேலைகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகலாம். புதிய நட்புக்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான கவலைகள் விலகும்.

சிம்மம்:

வேலை செய்யும் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சில ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள். வியாபார ரீதியாக சில அலைச்சல் உண்டாகலாம்.

கன்னி:

வாழ்க்கை துணை வழியே மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். புதிய நபர்களின் அறிமுகம் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுக்கும். பயணங்களால் சில அனுகூலம் பெறுவீர்கள்.

துலாம்:

இன்று வழக்கு சார்ந்த விஷயங்களில் சில புரிதல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சந்தித்த பிரச்சனைகள் விலகும். நெருக்கமானவர்கள் வழியே நற்செய்தி வந்து சேரும்.

விருச்சிகம்:

குழந்தைகள் உடல் நலனில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுப காரிய தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும்.

தனுசு:

இன்று உங்கள் வாக்கு சாதுரியத்தால் சில முக்கியமான காரியத்தை செய்து முடிப்பீர்கள். குழந்தைகள் விஷயங்களில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். குடும்பத்தில் மனக்கசப்புகள் விலகும்.

மகரம்:

இன்று பத்திரிக்கை துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கணவன் மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம். மனதில் அமைதி உண்டாகும்.

கும்பம்:

இன்று வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் வழியாக நன்மை பெறுவீர்கள். சாமர்த்தியமான பேச்சுகளால் நினைத்ததை சாதிப்பீர்கள். நன்மை உண்டாகும்.

மீனம்:

இன்று உங்களுடைய கோபத்தை அலுவலகத்தில் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் வந்து சேரும். முக்கிய நபர்களிடமிருந்து பரிசு பெறுவீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US