இன்றைய ராசிபலன் (19-08-2026)
மேஷம்:
முடிந்தவரை தொழில் ரீதியாக நீங்கள் முக்கியமான முடிவுகள் எடுப்பதை தள்ளி வைக்கவும். விளையாட்டு துறையில் இருப்பவர்களுக்கு இன்று நிறைய வாய்ப்புகள் தேடி வரும்.
ரிஷபம்:
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்கிறீர்கள் வேலை ரீதியாக உங்களுடைய திறமைகள் வெளிப்படும். உடன் இருப்பவர்களை பற்றிய நல்ல புரிதல் உண்டாகும்.
மிதுனம்:
மனதில் புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். உறவினர்களுடைய எண்ணத்தை புரிந்து கொள்வீர்கள். தாய்மாமன் வழியே ஏற்பட்ட மன கசப்புகள் விலகும்.
கடகம்:
இன்று அரசு சார்ந்த உதவிகள் பெறுவீர்கள். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்வது அவசியம். சுற்றுலா பயணம் செல்வதற்கு திட்டமிடுவீர்கள்.
சிம்மம்:
பொருளாதாரம் உயர்வு குறித்து மனதில் எண்ணங்கள் மேலோங்கும். நீண்ட நேரம் கண் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது அவசியம்.
கன்னி:
நண்பர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். பழைய சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.
துலாம்:
இன்று செயல்பாடுகளில் மிகுந்த கவனம் வேண்டும். பேச்சுக்களில் பொறுமையை கையாள வேண்டும். மறைமுகமான நெருக்கடிகளை சந்திக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
விருச்சிகம்:
குடும்பத்தை அனுசரித்து செல்வது அவசியம். உடன் பிறந்தவர்களுடைய முழு ஒத்துழைப்பை பெறுவீர்கள். தெய்வ வழிபாடு உங்களுக்கு மன அமைதியை கொடுக்கும்.
தனுசு:
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். விவசாய பணிகளில் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சனை விலகும்.
மகரம்:
மனதில் இருந்து வந்த கவலைகள் விலகும். சமுதாய பணிகளில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். வாகன வசதிகள் மேம்படும். முக்கிய நபரின் ஆலோசனை கிடைக்கும்.
கும்பம்:
இன்று விலகி இருந்தவர்கள் உங்களை தேடி விரும்பி வந்து பேசுவார்கள். நினைத்த காரியங்கள் கைகூடிவரும். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.
மீனம்:
இன்று உணர்ச்சிவசப்பட்டு தேவையில்லாத வார்த்தைகளை விடாதீர்க. மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் வரலாம். மாணவர்களுக்கு கல்வியில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |