நாளைய ராசி பலன் (24-08-2026)

Report

மேஷம்:

உடன் பிறந்தவர்களிடம் தேவை இல்லாத வாக்குவாதம் வைத்துக் கொள்ளாதீர்கள். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டு. தர்ம காரியங்களில் அதிக ஆர்வம் உண்டாகும்.

ரிஷபம்:

இன்று வேலையில் சற்று பொறுமையை கையாள்வது அவசியம். கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும்.

மிதுனம்:

இன்று திறமைக்கேற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். விலகி சென்றவர்கள் உங்களை விரும்பி வந்து பேசுவார்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கடகம்:

விரும்பிய காரியத்தை நினைத்தபடி செய்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். தந்தை வழியில் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கும்.

நாய்களுக்கும் கர்மாவுக்கும் என்ன தொடர்பு? யார் வீட்டில் நாய் கட்டாயம் வளர்க்க கூடாது?

நாய்களுக்கும் கர்மாவுக்கும் என்ன தொடர்பு? யார் வீட்டில் நாய் கட்டாயம் வளர்க்க கூடாது?

சிம்மம்:

பிள்ளைகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உங்களுடைய தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உண்டு.

கன்னி:

எதிர்பாராத சில செலவுகள் வழியாக சேமிப்புகள் குறையும். உடன் பிறந்தவர்களை பற்றிய நன்கு புரிதல் உண்டாகும். விவேகத்துடன் செயல்படுவதால் நல்ல மாற்றம் உண்டாகும்.

துலாம்:

எழுத்து சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம். மறைமுக திறமைகள் வெளிப்படும்.

விருச்சிகம்:

மனதில் குடும்ப உறுப்பினர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கூட்டாளிகளுடன் எதிர்பாராத மனக்கசப்புகள் வரலாம். கேட்ட இடத்திலிருந்து பணம் வந்து சேரும்.

2026 செப்டம்பர் மாத பலன்: தொட்ட காரியங்களில் வெற்றியை பெறப்போகும் துலாம் ராசியினர்

2026 செப்டம்பர் மாத பலன்: தொட்ட காரியங்களில் வெற்றியை பெறப்போகும் துலாம் ராசியினர்

தனுசு:

எதிலும் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது அவசியம். ஒரு சிலருக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும்.

மகரம்:

திடீர் செலவுகளால் மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகலாம். சேமிப்பு தொடர்பான சிந்தனை மேலோங்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.

கும்பம்:

இன்று சுய முயற்சியால் ஒரு முக்கியமான விஷயத்தை சாதித்துக் கொள்வீர்கள். நண்பர்கள் சந்திப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் தொடர்பான விஷயம் கைக்கூடி வரும்.

மீனம்:

எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். உயர் கல்வி தொடர்பான குழப்பங்கள் விலகும். குடும்ப பெரியோர்களின் ஒத்துழைப்பு பெறுவீர்கள். பொறுமையை கையாள்வது அவசியம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US