இன்றைய ராசி பலன் (17-02-2026)
மேஷம்:
மனதில் சிந்தனைகளும் குழப்பமும் வந்து செல்லும். முக்கிய நபர்களிடம் ஆலோசனை செய்வீர்கள். மதியம் மேல் தொழில் ரீதியாக மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். பொழுது போக்கு விஷயங்களில் பங்கு கொள்வீர்கள்.
ரிஷபம்:
நண்பர்களை பற்றி புரிந்து கொள்ளும் நாள். சுற்றி உள்ளவர்களின் உண்மை முகத்தை புரிந்து கொள்வீர்கள். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம்.
மிதுனம்:
குடும்பத்தில் உள்ளவர்களிடம் கவனமாக பழக வேண்டும். வேலைக்காக திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். குழந்தைகள் நலனில் முழு அக்கறை செலுத்த வேண்டும். பண விஷயங்களில் கவனம் வேண்டும்.
கடகம்:
வேலையில் முழு கவனம் செலுத்த முடியாமல் போகலாம். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். குடும்பத்தினரிடம் எதிர்பாராத வாக்கு வாதம் உண்டாகலாம். பிடித்த விஷயங்கள் செய்து மகிழ்வீர்கள்.
சிம்மம்:
வேலைக்காக நீங்கள் திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். பழைய நட்புகளை சந்திப்பீர்கள். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். கடன் தொல்லை விலகும் நாள்.
கன்னி:
உங்கள் வாழ்க்கை துணையிடம் சில விஷயங்களை மறைக்காமல் பேசுங்கள். குடும்பத்தில் தேவை இல்லாத சண்டைகள் வரலாம். முகம் தெரியாத நபர்களிடம் இருந்து உதவி பெறுவீர்கள்.
துலாம்:
மனதில் தன்னம்பிக்கை பிறக்கும் நாள். உங்கள் வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெரும். தேவை இல்லாத சிந்தனை குறைத்து கொள்ளுங்கள். வழக்கு தொடர்பான குழப்பம் வரும்.
விருச்சிகம்:
வீண் கோபம் தவிர்க்க வேண்டும். வியாபாரம் விரிவு செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு சில சங்கடம் வரலாம். காதல் வாழ்க்கையில் உள்ள கசப்புகள் விலகும்.
தனுசு:
உடல் சோர்வு உண்டாகும். உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களை புரிந்து நடந்து கொள்ளாமல் இருக்கலாம். உணவு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள சண்டை விலகும்.
மகரம்:
சிலரின் உண்மை முகம் புரிந்து கொள்வீர்கள். நண்பர்களுடன் பொழுது போக்கு விஷயங்களில் பங்கு கொள்வீர்கள். பிடித்த நபர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.
கும்பம்:
அத்தை வழி உறவுகளால் சந்தித்து வந்த பிரச்சனை விலகும். வேலைக்காக தொலை தூர பயணம் செல்ல நேரும். பொருளாதாரத்தில் இருந்து வந்த சிக்கல் விலகும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
மீனம்:
பண தொடர்பான கணக்கு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சொந்த ஊரில் சந்தித்து வந்த பிரச்சனை விலகும். வேலை பளு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனை முடிவிற்கு வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |