நாளைய ராசிபலன் (05-11-2026)

Report

மேஷம்:

அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரலாம். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்கிறீர்கள். மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.

ரிஷபம்:

வியாபாரம் தொடர்பாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். புதுவிதமான இலக்குகள் உருவாகும். தந்தை வழியே உங்களுக்கு ஆதரவு கிடைக்கும், எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும்.

மிதுனம்:

திட்டமிட்ட காரியங்களை சரியாக செய்து முடிப்பீர்கள். பொருளாதார சிக்கல்களை சமாளிப்பீர்கள். சக ஊழியர்களால் மன அமைதி கிடைக்கும். கல்வியில் இருந்த மந்தத்தன்மை குறையும்.

2026 ராகு கேது பெயர்ச்சி: 6 ராசிகளுடைய வாழ்க்கையே மாறப் போகிறதாம்

2026 ராகு கேது பெயர்ச்சி: 6 ராசிகளுடைய வாழ்க்கையே மாறப் போகிறதாம்

கடகம்:

பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் விலகும். சுப காரிய செயல்களில் சில தாமதங்கள் உண்டாகலாம். வாகன பராமரிப்பு தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

சிம்மம்:

பொன் பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் உயரும். வியாபார பணிகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள்.

கன்னி:

சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். சாலை பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். முன் கோபம் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தை அனுசரித்து செல்வது அவசியம்.

துலாம்:

மறைமுகமான சில விமர்சனங்கள் வந்து செல்லலாம். நெருக்கமானவர்களை அனுசரித்து செல்வது அவசியம். எதிர்பாராத சில புதிய பயணங்கள் உருவாக்கும்.

விருச்சிகம்:

புதுவிதமான ஆசைகள் உண்டாகும். புதுமனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடிவரும். பிரபலமானவர்களுடைய அறிமுகம் கிடைக்கும்.

தனுசு:

சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் விலகும். விவசாய பணிகள் மேம்படும்.

சனியை வென்ற தசரத மகாராஜா... சனி திசை நடப்பவர்கள் இவரை பற்றிக்கொள்ளுங்கள்

சனியை வென்ற தசரத மகாராஜா... சனி திசை நடப்பவர்கள் இவரை பற்றிக்கொள்ளுங்கள்

மகரம்:

மனதளவில் சில உற்சாகம் மலரும். வெளிவட்டத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். வேலையில் உயர்வான சூழல் அமையும்.

கும்பம்:

மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சில ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள். வாடிக்கையாளர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். விவேகமான நாள்.

மீனம்:

உடன் பிறந்தவர்கள் வழியே ஒத்துழைப்பை பெறுவீர்கள். பழகும் விதத்தில் சில மாற்றங்களை சந்திப்பீர்கள். வேலை செய்யும் இடங்களில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US