நாளைய ராசி பலன்(17-11-2025)
மேஷம்:
இன்று வேலைக்காக திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். சிலருக்கு நிலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்ல நாள்.
ரிஷபம்:
சிலருக்கு நண்பர்களுடன் சண்டைகள் வரலாம், கவனமாக பழகுவது அவசியம் ஆகும். தொழில் வாழ்க்கையில் சந்தித்த சிக்கல்கள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் பெறுவீர்கள்.
மிதுனம்:
இன்று நீங்கள் வேலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு சில சிக்கல்கள் வரலாம். மதியம் மேல் மகிழ்ச்சியான சூழல் குடும்பத்தில் இருக்கும்.
கடகம்:
இன்று உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். நண்பர்கள் வழியில் உங்களுக்கு நல்ல உதவிகளும் ஆதாயமும் கிடைக்கும். விமர்சனங்களை தாண்டி வெற்றி பெறக்கூடிய நாள்.
சிம்மம்:
இன்று ஒரு முக்கியமான சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள், நண்பர்களுடன் பொழுதுபோக்கு விஷயங்களில் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
கன்னி:
உங்களுக்கு பயணங்கள் வழியாக சில சோர்வுகளை சந்திக்க கூடும். உழைப்பிற்கான மதிப்பும் பாராட்டுகளை பெறுவீர்கள். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனை விலகும்.
துலாம்:
இன்று உங்களுடைய வேலையில் சில சோர்வுகள் உண்டாகும். உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். சூழல் அறிந்து உங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்.
விருச்சிகம்:
இன்று ஒரு சிலருக்கு திடீர் செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். எதிரிகள் தொல்லைகள் மறைந்து நன்மை பெறும் நாள்.
தனுசு:
இன்று உங்கள் குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் கைகூடிவரும். பிரபலமானவர்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். இன்று எந்த ஒரு முயற்சியையும் விவேகத்துடன் செய்வீர்கள்.
மகரம்:
சமுதாயப் பணிகளில் முன்வந்து கலந்து கொள்வீர்கள். தொழில் இடங்களில் உங்களுக்கு முக்கிய பொறுப்புகள் தேடி வரலாம். உடன் பிறந்தவர்கள் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்:
இன்று எதிர்காலத்தைப் பற்றிய பயமும் கவலையும் உண்டாகலாம். சமுதாயத்தில் பொறுப்புகளில் இருக்கக்கூடிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொறுமை காக்க வேண்டிய நாள்.
மீனம்:
இன்று எந்த ஒரு விஷயங்களையும் தீர ஆராய்ந்து சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய மாற்றங்களை சந்திப்பீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |