நாளைய ராசிபலன் (14-10-2026)
மேஷம்:
அரசு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத பொருள் வரவு கிடைக்கும். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்:
கணவன் மனைவி இடையே தேவையில்லாத விவாதங்கள் செய்ய வேண்டாம். முன்னேற்றமான நாள். மனதில் இருந்த கவலைகள் படிப்படியாக விலகும்.
மிதுனம்:
சுபகாரிய விரயங்கள் வரலாம். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆன்மீக காரியங்களில் மன அமைதி கிடைக்கும். பயனற்ற செலவுகளை குறைப்பது அவசியம்.
கடகம்:
தாய்வழி உறவுகளால் கருத்து வேறுபாடு வரலாம். கடன் தொடர்பான பிரச்சனைகள் விலகும். குழந்தைகள் பற்றிய எண்ணம் அதிகரிக்கும். புதிய அனுபவம் பிறக்கும்.
சிம்மம்:
எதிர்கால தொடர்பான முடிவுகளை எடுப்பீர்கள். நெருங்கியவர்களுடைய உதவியாய் முக்கியமான பிரச்சினை தீரும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.
கன்னி:
உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்துவீர்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையை பெறுவீர்கள்.
துலாம்:
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். வியாபார பணிகளில் இருந்து வந்த மந்த நிலை குறையும். வேலையில் உங்களுடைய திறமைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.
விருச்சிகம்:
உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு மனக்கசப்புகள் வந்து செல்லும். வேலை செய்யும் இடங்களில் தேவையில்லாத அலட்சியம் செய்யாதீர்கள்.
தனுசு:
குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். விமர்சன பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. உங்களுடைய செயல்களில் இருந்த மறைமுக தடைகள் விலகும்.
மகரம்:
சகோதரர்களால் சிறு சிறு வேறுபாடுகள் விலகும். நட்பு வட்டாரம் விரிவடையும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்கு வரும்.
கும்பம்:
சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். வீடு மற்றும் வாகனத்தை சரி செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் நம்பிக்கை கிடைக்கும்.
மீனம்:
எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை கிடைக்கும். சகோதர வழியே ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய பிரச்சனைகள் நல்ல முடிவை பெறும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |