நாளைய ராசி பலன் (09-10-2026)
மேஷம்:
வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் தொடர்பாக சந்தித்த பிரச்சனைகள் விலகும். உங்கள் திறமைக்கு ஏற்ப பாராட்டுக்கள் கிடைக்கும்.
ரிஷபம்:
எதிலும் வேகத்தை விடவும் விவேகத்துடன் செயல்படுவது அவசியம். சிக்கனத்தை கடைபிடிப்பது நன்மை தரும். வெளியூர் பயணங்களில் அலைச்சல் உண்டாகும்.
மிதுனம்:
உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்பை பெறுவீர்கள். தாய் வழி உறவுகளால் ஏற்பட்ட கசப்புகள் விலகும். உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகும்.
கடகம்:
வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும். குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். நெருக்கமானவர்களுடன் சந்திப்பு உண்டாகும்.
சிம்மம்:
வியாபார பணிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்கள் சிந்தனைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உடன் இருப்பவர்கள் பற்றி நல்ல புரிதல் உண்டாகும்.
கன்னி:
உங்களுக்கு வியாபாரம் தொடர்பாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். சமுதாய பணிகளில் கலந்து கொள்வீர்கள். கலை தொடர்பான விஷயங்களில் அதிக ஆர்வம் உண்டாகும்.
துலாம்:
எதிர்பாராத செலவுகள் சந்திப்பீர்கள். வேலை பளு அதிகரிக்கும். நண்பர்கள் வழியே உங்களுக்கு நல்ல ஆறுதல் கிடைக்கும். வாழ்க்கை பற்றிய அனுபவங்கள் அதிகரிக்கும்.
விருச்சிகம்:
சேமிப்பு மேம்படுத்துவதை பற்றி சிந்தனை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் வழியே மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும்.
தனுசு:
வேலை ஆட்களின் ஒத்துழைப்பு பெறுவீர்கள். பொருளாதார விஷயங்களில் சற்று ஏற்ற இறக்கமான நிலை காணப்படும். அக்கம்பக்கம் இருப்பவர்களின் தேவையற்ற விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.
மகரம்:
மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.
கும்பம்:
நினைத்த காரியங்கள் எதிர்பார்த்த முடிவுகளில் காலதாமதம் வரலாம். உடன் பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது அவசியம். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.
மீனம்:
மனதில் புதுவிதமான கற்பனை வளரும். உங்களுடைய ஆசைகள் நிறைவேறும். நெருக்கடியான பிரச்சனைகள் விலகும். எதிர்பாராத சில உதவிகள் வந்து சேரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |