நாளைய ராசி பலன் (18-09-2026)
மேஷம்:
இன்று வீடுகளில் பதட்டமான சூழ்நிலை குறைக்க அமைதி காப்பது அவசியம். வேலை பளு அதிகரிக்கும். நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவாக இருப்பார்கள். கடன் தொல்லை விலகும்.
ரிஷபம்:
வெளிநாடு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த தடை விலகும். பணம் விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திடீர் மருத்துவ செலவுகளை வரலாம்.
மிதுனம்:
இன்று எதிர்காலம் வாழ்க்கை பற்றிய கவலை உண்டாகும். உணவு விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் இருந்து வந்த கசப்புகள் விலகும்.
கடகம்:
தாய் வழி உறவுகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வாழ்க்கை துணையிடம் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம்.
சிம்மம்:
வியாபாரம் தொடர்பாக திடீர் வெளியூர் செல்ல பயணம் செல்ல நேரலாம். வருமானத்தில் இருந்த தடை விலகும். மாலை மேல் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.
கன்னி:
படிப்பில் இருந்து வந்த தடைகளை விலகும். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். ஒரு சிலர் சொந்த ஊருக்கு செல்லக்கூடிய யோகம் உண்டாகும். பண பிரச்சனை விலகும்.
துலாம்:
இன்று காலை முதல் நெருக்கடியான சூழலை எளிதாக சமாளிப்பீர்கள். வேலையில் உங்களுக்கான மதிப்பு உயரும். எதிர்கால வாழ்க்கை பற்றிய பயம் விலகும்.
விருச்சிகம்:
உடன் பிறந்தவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். வாழ்க்கை துணையின் குடும்பத்தால் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். முன்னேற்றமான நாள்.
தனுசு:
இன்று பிள்ளைகளுக்காக சில முக்கியமான வேலைகளை செய்வீர்கள். நீண்ட நாள் கடன் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
மகரம்:
வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இன்று முக்கியமான வாய்ப்புகள் தேடி வரும். உறவினர்களிடையே தேவையில்லாத கருத்து மோதல்களை தவிர்த்து விடுங்கள். செல்வாக்கு உயரும்.
கும்பம்:
வெளி வட்டாரங்களில் உங்களுக்கான மதிப்பு உயரும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான செய்திகள் வந்து சேரும். நன்மையான நாள்.
மீனம்:
குழந்தைகளுடன் மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். நீண்ட நாள் சொத்து பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். இன்று எதிர்பாராத யோகமும் அதிர்ஷ்டமும் தேடி வரும்.