நாளைய ராசிபலன்(02-09-2026)

Report

மேஷம்:

இன்று முன் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது அவசியம். பொறுமை வேண்டும்.

ரிஷபம்:

திட்டமிட்ட வேலைகளில் சில அலைச்சல் வரலாம். நண்பர்களை அனுசரித்து செல்வது அவசியம். புதிய முதலீடுகளை பற்றிய சிந்தனை உருவாகும்.

மிதுனம்:

தொழில் ரீதியாக நல்ல லாபகரமான சூழ்நிலை பெறுவீர்கள். பெரியவர்களின் முழு ஆசீர்வாதமும் வழிகாட்டுதலும் ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கும்.

கடகம்:

மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நாள். வேலை தொடர்பான பயண வாய்ப்புகள் உங்களுக்கு கைக்கூடி வரும். வெளி உலக அனுபவம் பெறுவீர்கள்.

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 8 ஜோதிட குறிப்புகள்..

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 8 ஜோதிட குறிப்புகள்..

சிம்மம்:

வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும். வாழ்க்கை துணியை அனுசரித்து செல்வது அவசியம். கடன் அடைக்கும் வாய்ப்புகள் பெறுவீர்கள்.

கன்னி:

பழைய சிந்தனைகளால் மனம் குழப்பம் அடையும். புதிய நபர்களிடம் தேவை இல்லாத வாக்குவாதம் வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும்.

துலாம்:

குடும்பத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவி இடையே நல்ல நெருக்கம் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள்.

விருச்சிகம்:

எதிர்பாராத திடீர் பணவரவுகள் வரலாம். மறைமுக பிரச்சனைகள் நடக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆதாயமான நாள்.

தனுசு:

புதிய விஷயங்களில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ள வேண்டும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

வீடுகளில் துளசியை பறிக்கும் பொழுது இந்த மந்திரம் சொல்ல தவறாதீர்கள்

வீடுகளில் துளசியை பறிக்கும் பொழுது இந்த மந்திரம் சொல்ல தவறாதீர்கள்

மகரம்:

நெருக்கமான ஒருவரிடம் மனம் விட்டு பேசுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனை கிடைக்கும். சமூக பணிகளில் உங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.

கும்பம்:

இன்று தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகள் வழியே நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.

மீனம்:

வியாபார பணிகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் விலகும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மூத்தவர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் தவிர்க்க வேண்டும் .

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US