2026: நாளைய கிருஷ்ண ஜெயந்தி ராசி பலன் ராசி பலன்

Report

 மேஷம்:

அதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம். பிள்ளைகள் படிப்பில் மீதும் கவனம் செலுத்துவீர்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் நிலை வரலாம்.

ரிஷபம்:

இன்று ஆன்மீக பணியில் ஈடுபடுவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் உண்டான கவலைகள் விலகும். தொழில் சார்ந்து நல்ல முன்னேற்றம் அமையும்.

மிதுனம்:

இன்று வெளிவட்டாரங்களில் உங்களுடைய பெயருக்கு சில களங்கம் ஏற்படலாம். கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம்.

கடகம்:

இன்று உணர்வு ரீதியாக இந்த முடிவுகளையும் அணுகாதீர்கள். பிள்ளைகளுடன் நேரம் செலவு செய்வீர்கள். தொழில் ரீதியாக நல்ல லாபம் கிடைக்கும் நாள்.

சிம்மம்:

வியாபாரத்தை மாற்றக்கூடிய யோசனை உண்டாகும். வீடு மனை வாங்கும் வாய்ப்புகள் கைகூடிவரும். பழைய சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் விலகும்.

2026 கிருஷ்ண ஜெயந்தி: நாளை கண்ணனை அழைத்து வழிபாடும் செய்யும் முறை

2026 கிருஷ்ண ஜெயந்தி: நாளை கண்ணனை அழைத்து வழிபாடும் செய்யும் முறை

கன்னி:

எதிர்கால வாழ்க்கையை பற்றிய கவலை உண்டாகலாம். திருமணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக முடிவெடுப்பது அவசியம். பிடித்த விஷயங்கள் செய்வீர்கள்.

துலாம்:

இன்று உங்கள் வீடுகளில் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். உங்களுக்கு நற்செய்தி வந்து சேரும். வெளிப்பட்டாரங்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும்.

விருச்சிகம்:

கடன் சார்ந்த விஷயங்களில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திருமணம் சார்ந்த விஷயங்களில் மூன்றாம் நபரை தலையிடல் செய்யாதீர்கள்.

தனுசு:

பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். தாய் வழி உறவுகளால் நல்ல ஆதரவு கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். கடன் தொல்லை விலகும்.

மகரம்:

நெருங்கியவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்திற்காக நீங்கள் திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். காதல் வாழ்க்கையில் இருந்து வந்து கசப்புகள் விலகும்.

கும்பம்:

நட்பு ரீதியாக இருந்து வந்த குழப்பங்கள் விலகும். வாழ்க்கை துணையை புரிந்து கொள்வீர்கள். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பவர் யார் தெரியுமா ?

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பவர் யார் தெரியுமா ?

மீனம்:

முகம் தெரியாத நபர்களிடம் தேவை இல்லாத விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். வெளிநாடு சென்று வேலை பார்ப்பது பற்றிய ஆலோசனை செய்வீர்கள். நற்செய்தி தேடி வரும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US