நாளைய ராசி பலன்(29-04-2026)
மேஷம்:
ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணரக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. மதியம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.
ரிஷபம்:
தொழில் ரீதியாக நீங்கள் சந்தித்த பிரச்சனைகளிலிருந்து விடுபட போகிறீர்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களைப் பற்றி தவறாக புரிந்து கொண்டவர் விலகிச் செல்வார்கள்.
மிதுனம்:
தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள். கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகும். உடன் பிறந்தவர்களைப் பற்றி புரிந்து நடந்து கொள்வீர்கள்.
கடகம்:
இன்று எதிர்பாராத நட்புகளை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது அவசியம். வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் உருவாகும்.
சிம்மம்:
அரசியல் தொடர்புடையவர்களுக்கு இன்று முக்கியமான நாளாக இருக்கப் போகிறது. போட்டி தேர்வுகளுக்கு தயாராகக் கூடிய மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாக்கும். நன்மை பெறக்கூடிய நாள்.
கன்னி:
குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தைகள் தடையின்றி நடக்கும். எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயமும் பதட்டமும் வரலாம். தியானம் செய்வதால் மன அழுத்தம் குறையும்.
துலாம்:
இன்று வேலை பளு அதிகரிக்கும். முகம் தெரியாதவர்களிடம் தேவை இல்லாத குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். உணவு விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்:
கணவன் மனைவியாக வெளிநாடு சுற்றுலா செல்லக்கூடிய யோகம் அமையும். வர்த்தக துறையில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த நாளாகவே இருக்கும். வார்த்தைகளில் கவனம் வேண்டும்.
தனுசு:
கலை துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசாங்க பதவியில் உள்ளவர்கள் சில சிக்கல்களில் மாட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தாய் உடல் நிலையில் கவனம் வேண்டும்.
மகரம்:
பல யோசனைகளுக்கு பிறகு ஒரு முக்கியமான முடிவை எடுப்பீர்கள். எதிர்பாராத நபரிடமிருந்து அழைப்புகளை பெறலாம். குலதெய்வ வழிபாடுகளில் ஆர்வம் உண்டாகும்.
கும்பம்:
உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களிடம் குடும்ப பிரச்சனை பற்றி பகிர்ந்து கொள்ளாதீர்கள். பொருளாதாரத்தில் சந்தித்த சிக்கல்கள் விலகும்.
மீனம்:
நட்பு வட்டாரம் விரிவடையக்கூடிய நாள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி மன அமைதி பெறக்கூடிய நாள். பிள்ளைகள் நலனில் கவனம் வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |