நாளைய ராசி பலன் (03-12-2025)
மேஷம் :
இன்று உங்கள் மனநிலையில் சில பதட்டம் உண்டாகும் .தொலை தூர பயணம் செல்வதை தவிர்க்கலாம். முக்கியனான இடங்களில் உங்கள் குரல் கொடுக்க தவறாதீர்கள். கவனம் தேவை.
ரிஷபம் :
வங்கி தொடர்பான விஷயங்களில் சந்தித்த பிரச்சனை விலகும். வெளியூர் செல்லும் வேலை உங்களுக்கு சாதகமாக அமையும். நெருங்கிய நபரிடம் மனம் விட்டு பேசுவீர்கள்.
மிதுனம் :
குடும்பத்தில் தேவை இல்லாத குழப்பங்கள் உண்டாகும். திருமணம் தொடர்பான விஷயங்களில் இருந்த சிக்கல் விலகும். சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கு சில மன வருத்தம் உண்டாகலாம்.
கடகம்:
மன ரீதியாக சந்தித்த பிரச்சனை விலகும். சவால்களை தைரியமாக சமாளிப்பீர்கள். கணவன் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் விஷயம் செல்லும் காரியம் வெற்றி பெரும்.
சிம்மம்:
அரசாங்க வழியே எதிர்பாராத சிக்கல் வரும். வம்பு வழக்குகள் முடிவிற்கு வரும். வியாபரம் செய்பவர்கள் விட்டு கொடுத்து செல்வது அவசியம் ஆகும்.பெற்றோர் உடல் நிலையில் கவனம் தேவை.
கன்னி:
குடும்பத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கும் நாள். திருமணம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. வேலை விஷயத்தில் உயர் அதிகாரிகளிடம் கவனமாக பேச வேண்டும்.
துலாம்:
மனதில் ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் மனதை புரிந்து நடந்து கொள்வார்கள். பகைவர்கள் விலகி செல்லும் நாள். பொருளாதாரத்தில் உள்ள சிக்கல் விலகும் நாள்.
விருச்சிகம்:
ஆரோக்கியத்தில் இருந்த சங்கடம் விலகும். வருமானத்தில் உள்ள தடைகள் விலகும். கணவன் மனைவி இடையே உள்ள சங்கடம் விலகும். கடன் வாங்குவதை கொடுப்பதை தவிர்க்கலாம்.
தனுசு:
பிள்ளைகள் எதிர்காலம் தேவைக்கான சில விஷயங்கள் செய்து கொள்வீர்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். சொந்தங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
மகரம் :
வேலை தொடர்பான முன்னேற்றம் பெறுவீர்கள். உங்கள் திறமையை வளர்த்து கொள்ளும் நாள். எதிர்பாராத நபரின் சந்திப்பால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். நன்மையான நாள்.
கும்பம் :
சிலருக்கு வெளியூர் செல்லும் காரியங்களில் தடை வரலாம். முடிந்த வரை உங்கள் வீடுகளில் உள்ள பிரச்சனையை மூன்றாம் நபரிடம் சரி செய்வீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் வரும்.
மீனம் :
பெற்றோர்கள் உடல் நிலையில் கவனம் தேவை. நண்பர்கள் வட்டாரம் விரிவடையும் நாள். சிலர் சமுதாய பணிகளில் பங்கு கொள்வீர்கள். மதியம் மேல் குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |