நாளைய ராசிபலன் (12-07-2026)

Report

மேஷம்:

போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் முழு ஒத்துழைப்பையும் பெறுவீர்கள்.

ரிஷபம்:

பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் வழியே ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு. கல்வியில் சாதகமான சூழ்நிலை உருவாகும்.

மிதுனம்:

இன்று உங்களுடைய சிந்தனைகளில் புதுவிதமான எண்ணம் உருவாகும். எதிர்பாராத செலவுகள் வழியாக மனசோர்வு அடையும். முக்கிய நபர்களின் வழியே நீங்கள் நினைத்த காரியத்தை சாதிப்பீர்கள்.

இந்த 3 ராசியில் பிறந்தவர்களுக்கு அம்மனின் முழு அருள் எப்பொழுதும் இருக்குமாம்

இந்த 3 ராசியில் பிறந்தவர்களுக்கு அம்மனின் முழு அருள் எப்பொழுதும் இருக்குமாம்

கடகம்:

மறைமுக எதிர்ப்புகள் வழியாக சில காரியம் தாமதமாகலாம். உத்தியோகத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். உங்களுடைய அனுபவங்கள் பிறருக்கு உதவக்கூடியதாக இருக்கும்.

சிம்மம்:

இன்று சேமிப்பில் அதிக அளவில் ஈடுபாடு செலுத்துவீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். மனதில் இருந்து வந்த கவலைகள் விலகும். தொழிலில் அக்கறை செலுத்துவீர்கள்.

கன்னி:

இன்று சமுதாயப் பணிகளில் ஈடுபாட்டோடு வேலை செய்வீர்கள். தான தர்ம காரியங்களில் பங்கு கொள்வீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் வழியாக மாற்றங்கள் உண்டாகும்.

துலாம்:

அதிகாரிகள் இடத்தில் இல்லாத தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். வாழ்க்கை துணையை அனுசரித்து செல்வது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு உண்டாகும்.

விருச்சிகம்:

இன்று தேவையில்லாத விமர்சனங்களை ஒருவர் மீது வைக்க வேண்டாம். குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். வாழ்க்கை துணையிடும் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.

தனுசு:

இன்று குடும்ப உறுப்பினர்கள் எண்ணங்களை புரிந்து நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகள் உடைய ஒத்துழைப்பை பெறுவீர்கள். வேறு மொழி பேசும் நண்பர்கள் அறிமுகம் கிடைக்கும்.

ஆன்மிகம்: வீடுகளில் ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 8 பழக்கங்கள்

ஆன்மிகம்: வீடுகளில் ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 8 பழக்கங்கள்

மகரம்:

உடன் இருப்பவர்களின் தன்மையை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் உங்களை மாற்றிக் கொள்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனை குறையும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

கும்பம்:

வருமானத்தை மேம்படுத்துவதை பற்றி சிந்தனைகள் செய்வீர்கள். பொழுதுபோக்கு சார்ந்த துறைகளில் உங்களுக்கு ஆர்வம் உண்டாகும். நண்பர்கள் வழியாக ஆதாயம் கிடைக்கும். புதுவிதமான சிந்தனை உருவாகும்.

மீனம்:

வியாபாரம் தொடர்பான பணிகளில் அதிக ஆர்வத்தோடு செயல்படுவீர்கள். எண்ணிய காரியத்தை நிறைவேற்றுவதில் சில சிக்கல் வரலாம். எதிர்பாராத இடத்திலிருந்து உங்களுக்கு பரிசு பொருட்கள் தேடி வரும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US