நாளைய ராசிபலன் (15-07-2026)

Report

மேஷம்:

உறவினர்களுடைய ஒத்துழைப்பால் முக்கியமான வேலை முடிவுக்கு வரும். விவசாய வேலைகளில் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். பெரியவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பீர்கள்.

ரிஷபம்:

நண்பர்கள் வழியாக உங்களுக்கு நல்ல அனுகூலம் உண்டு. வீடு தொடர்பான பிரச்சனைகள் விலகும். தாயின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்:

கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். பொருளாதார பிரச்சனைகள் விலகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம்.

இந்த 4 ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் அதிகளவிலான துன்பத்தை அனுபவிப்பார்களாம்

இந்த 4 ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் அதிகளவிலான துன்பத்தை அனுபவிப்பார்களாம்

கடகம்:

இன்று கோபம் இல்லாமல் செயல்படுவது அவசியம். வேலையில் முழு கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது அமைதியை கொடுக்கும். தற்பெருமையை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:

வியாபாரத்தில் மறைமுக எதிரிகள் தொல்லை வரலாம். உடன் பிறந்தவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை செய்யாதீர்கள். வெளி உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.

கன்னி:

மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த தடை விலகும்.

துலாம்:

குடும்பத்தில் அமைதி உண்டாகும். பாதையில் நின்ற பணி மீண்டும் துவங்கும். விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த அனுபவங்கள் கிடைக்கும்.

விருச்சிகம்:

வேலையில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். கடன் பிரச்சனை விலகும். உடன் இருப்பவர்களின் முழு ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

தனுசு:

இன்று உங்கள் சிந்தனைகளில் புதுமை உண்டாகும். நீண்ட நாட்கள் ஆசை நிறைவேறும். தந்தை வழியில் ஆதரவான சூழல் கிடைக்கும். நன்மைகள் நாள்.

உங்கள் பிறந்த கிழமையே உங்கள் பலம்.. உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மற்றும் பரிகாரம்

உங்கள் பிறந்த கிழமையே உங்கள் பலம்.. உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மற்றும் பரிகாரம்

மகரம்:

உடன் பிறந்தவர்களிடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். ஒப்பந்த பணிகளில் முன்னேற்றம் கிடைக்கும். போட்டி சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள்.

கும்பம்:

வேலையில் புதிய பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சொத்துக்கள் சார்ந்த விஷயங்களில் நல்ல தீர்வு கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் மாற்றம் உண்டாகும்.

மீனம்:

இன்று உங்கள் உடல் தோற்றத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள். விவேகமான சிந்தனைகளால் நினைத்ததை சாதிப்பீர்கள். பண பற்றாக்குறை விலகும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US