நாளைய ராசிபலன் (23-07-2026)

Report

மேஷம்:

தம்பதிகளுக்கு இடையே இருந்து வந்த மன வருத்தங்கள் குறையும். வழக்கு விவாதங்களில் நீங்கள் எதிர்பார்த்த முடிவைப்பெறுவீர்கள். தொலைந்த பொருட்கள் மீண்டும் கைகளுக்கு வந்து சேரும்.

ரிஷபம்:

உயர் அதிகாரிகள் வழியாக சில முக்கியமான விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். வழக்குகளில் நீங்கள் நுணுக்கமான விஷயங்கள் கற்றுத் தெரிந்து வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பொருள் வரவு உண்டு.

மிதுனம்:

கணவன் மனைவி இடையே நல்ல நெருக்கம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். சவாலான வேலைகளையும் நீங்கள் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.

சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த எண்ணெய் பாலாக மாறிய அதிசயம்

சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த எண்ணெய் பாலாக மாறிய அதிசயம்

கடகம்:

நீங்கள் நினைத்த சில காரியங்கள் நல்ல முடிவை பெறாமல் போகலாம். தாயாருடன் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். நண்பர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை நிமித்தமாக வெளியூர் செல்லலாம்.

சிம்மம்:

தன்னம்பிக்கையுடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உயர் அதிகாரிகளிடமிருந்து வந்த மன கசப்புகள் விலகும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடைய முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

கன்னி:

கணவன் மனைவியிடையே நல்ல புரிதல் உண்டாகும். செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள். உடல் தோற்றத்திற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நம்பிக்கை பிறக்கும் நாள்.

துலாம்:

மனதிற்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை யோசிக்காமல் வாங்கி மகிழ்வீர்கள். பழைய நினைவுகளால் சில தாமதங்களை சந்திக்கலாம். வேலையில் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய நாள்.

விருச்சிகம்:

இன்று பற்றற்ற தன்மையுடன் வாழ்வீர்கள். யாருக்கும் எந்த ஒரு வாக்குறுதியும் கொடுக்காதீர்கள். பழைய நண்பர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். ஆடம்பர பொருட்கள் மீது ஈர்ப்பு உண்டாகும்.

வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? லட்சுமி நரசிம்மர் கோயில்களில் தரிசனம் செய்யுங்கள்

வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? லட்சுமி நரசிம்மர் கோயில்களில் தரிசனம் செய்யுங்கள்

தனுசு:

இன்று சாமர்த்தியமான பேச்சுக்கள் வழியாக முக்கியமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கல்வி சார்ந்த விஷயங்களில் புதிய அனுபவம் உண்டாகும் நாள்.

மகரம்:

வியாபார பணிகளில் இருந்து மந்த நிலை படிப்படியாக குறையும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். நிலுவையில் இருந்து வந்த பண வரவுகள் கிடைக்கும். பிறருடைய ஆதரவை பெறுவீர்கள்.

கும்பம்:

வேலையில் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பூர்வீக சொத்து ரீதியாக எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வரவிக்கேற்ற செலவுகள் உண்டாகும். வாழ்க்கை துணையின் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள்.

மீனம்:

உறவினர்கள் வழியே விட்டு கொடுத்து செல்வது அவசியம். சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். மற்றவர்கள் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனம் வேண்டும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US