நாளைய ராசிபலன் (08-06-2026)
மேஷம்:
எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ந்து பாராமல் முடிவிற்கு வர வேண்டாம். தேவை இல்லாத அவப்பெயர் பெறுவதற்கான நிலை உண்டாகும். கவனம் வேண்டும். மதியமேல் வேலைப்பளு குறையும்.
ரிஷபம்:
இன்று வீட்டு பெரியவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் உங்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தொழில் ரீதியாக முன்னேற்றம் அடைவீர்கள்.
மிதுனம்:
இன்று நீங்கள் சுயநலமாக சில முடிவுகள் எடுப்பதற்கு தள்ளப்படலாம். குடும்பத்தில் தேவையில்லாத வாக்குவாதம் சண்டைகள் உருவாகக்கூடிய நிலை வரும். நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.
கடகம்:
அத்தை வழி உறவுகளால் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். காதல் வாழ்க்கையில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.
சிம்மம்:
வியாபாரத்தில் முதலீடு செய்யும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். சொந்தங்கள் மத்தியில் ஏற்பட்ட அவப்பெயரை சரி செய்வீர்கள். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி:
திருமண தொடர்பான பேச்சுகளில் இருந்து வந்து தடைகள் விலகும். வேலையில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.
துலாம்:
இன்று மனதில் எதிர்காலத்தைப் பற்றிய குழப்பமும் பயமும் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தினர் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.
விருச்சிகம்:
வங்கி கணக்குகளில் நீங்கள் கவனமாக கையாள வேண்டும். மூன்றாம் நபரிடம் தேவையில்லாத விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். விலை உயர்ந்த பொருட்களின் கவனம் வேண்டும்.
தனுசு:
இன்று மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். தங்கம் பொருள் சேர்க்கை உண்டாகும். சொந்தங்களை சந்திப்பீர்கள்.
மகரம்:
எதிர்காலம் பற்றிய பயம் விலகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். பெற்றோர்களுக்காக சில முக்கிய முடிவுகள் எடுக்கும் நாள்.
கும்பம்:
தேவையில்லாத விஷயங்களில் நீங்கள் கலந்து கொள்ளாதீர்கள். ஆன்மீக ஈடுபாடுகளில் மனம் ஆர்வம் செலுத்தும். முடிந்தவரை வாக்குறுதிகள் கொடுக்கும் பொழுது மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.
மீனம்:
கடந்த கால விஷயங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். உறவினர்களின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் இருந்த சிக்கல் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |