நாளைய ராசி பலன்(16-11-2025)
மேஷம்:
இன்று நீங்கள் வேலை மாறுதல் பற்றி ஆலோசனை செய்வீர்கள். சிலருக்கு உடன் பிறந்தவர்களால் சில இனிமையான செய்தி வரலாம். மதியம் மேல் நண்பர்களுடன் நேரம் செலவு செய்வீர்கள்.
ரிஷபம்:
இன்று கணவன் மனைவி இடையே வீண் வாக்கு வாதம் வரலாம். தேவை இல்லாத விஷயங்களை பற்றி அதிகம் சிந்திப்பதை தவிர்க்க வேண்டும். உடன் பணிபுரிபவர்களின் உதவி கிடைக்கும்.
மிதுனம்:
குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். தாய் வழி உறவுகளிடம் சிக்கலை சந்திப்பீர்கள். காதல் வாழ்க்கையில் சந்தித்த கசப்புகள் விலகும் நாள்.
கடகம்:
குழந்தைகளுடன் பொழுது போக்கு நேரத்தை செலவு செய்வீர்கள். வருமானத்தை உயர்த்தும் வேலையில் ஈடுபடுவீர்கள். செல்ல பிராணிகளிடம் கவனம் தேவை. ஆரோக்கியம் சரி ஆகும்.
சிம்மம்:
தொலை தூர பயணம் சிலருக்கு நல்ல வாய்ப்புகளை கொடுக்கும். சிலருக்கு கல்வியில் சந்தித்த தடைகள் விலகும். முன்னோர்கள் வழிபாடு நல்ல மாற்றமும் பலனும் கொடுக்கும்.
கன்னி:
இன்று சொந்த வாழ்க்கை பற்றி எடுக்கும் முடிவுகளை மூன்றாம் நபரிடம் ஆலோசனை செய்யாதீர்கள். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் விலகும். உணவு பழக்கத்தில் கவனம் தேவை.
துலாம்:
உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். மதியம் மேல் வீடுகளில் நல்ல அமைதியான சூழல் உருவாகும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நன்மையான நாள்.
விருச்சிகம்:
இழுபறியாக இருந்த வேலை முடியும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வழக்கமான வேலைகளில் லாபம் காண்பீர். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.
தனுசு:
குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். பிள்ளைகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வம்பு வழக்குகளில் இருந்த சிக்கல்கள் விலகும். மகிழ்ச்சியான நாள்.
மகரம்:
சிலருக்கு குடும்பத்துடன் தொலை தூர பயணம் செல்ல நேரலாம். முக்கியமான மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களிடம் சற்று கவனமாக பழகுவது அவசியம்.
கும்பம்:
உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் விலகும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். சிலருக்கு காதல் வெற்றி பெரும் நாள்.
மீனம்:
இன்று வாழ்க்கை தொடர்பான முக்கியமான விஷயங்களை எடுப்பீர்கள். பிள்ளைகள் பற்றி புரிந்து கொள்ளும் நாள். மனைவி வழி சொந்தங்களால் சில கருத்து வேறுபாடுகள் வரலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |