நாளைய ராசி பலன்(09-07-2025)

Report

மேஷம்:

இன்று நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். புதிய தொழில் தொடங்குவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

ரிஷபம்:

சிலருக்கு மனதில் சில சங்கடங்கள் தோன்றி மறையும். மதியம் உடலில் சிறு உபாதைகள் உண்டாகலாம். தந்தையிடம் வீண் வாக்கு வாதம் செய்வதை தவிர்ப்பது நன்மை அளிக்கும்.

மிதுனம்:

முன்னோர்கள் வழிபாடு மிக சிறந்த பலன் கொடுக்கும். குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். தாய் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்:

திட்டமிட்டு செயல்படுவீர். செய்துவரும் தொழிலில் உங்கள் அணுகுமுறை லாபம் தரும். குழப்பம் நீங்கி தெளிவுடன் செயல்படுவீர். புதிய முயற்சியில் இறங்கி லாபம் அடைவீர்.

சிம்மம்:

புதிய வண்டி வாகனம் வாங்குவதை பற்றி யோசிப்பீர்கள். உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. வீண் செலுவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உணவு விஷயங்களில் கவனம் தேவை.

கன்னி:

அலுவலகத்தில் பிறர் சொல்லும் விமர்சனங்களை எடுத்துக்கொள்ளாதீர்கள். மனக் கவலைகள் உண்டாகும் நாள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

சனி வக்ர பெயர்ச்சி 2025 : எந்த ராசிகளுக்கு வெற்றிகள் காத்திருக்கிறது?

சனி வக்ர பெயர்ச்சி 2025 : எந்த ராசிகளுக்கு வெற்றிகள் காத்திருக்கிறது?

துலாம்:

இன்று உடல் நிலையில் சில தொந்தரவு சந்திப்பீர்கள். மருத்துவ செலவுகள் உண்டாகலாம். எதிர்பாராத சில காரியங்கள் நடக்கும். வழக்கு விஷயம் உங்களுக்கு சாதகமாக அமையும்.

விருச்சிகம்:

குழப்பங்கள் நீங்கி தெளிவடைவீர். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். நிலுவையில் இருந்த வேலைகளைச் முடிப்பீர். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் நிலை உயரும்.

தனுசு:

இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை அளிக்கும். மன அமைதி காக்க வேண்டிய நாள்.

மகரம்:

திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும்.  

கும்பம்:

எதிர்பாராத பரிசு பொருட்கள் கிடைக்கும் நாள். பிடித்த உணவுகள் சாப்பிட்டு மகிழ்வீர்கள். வேலையில் கவனம் செலுத்த வேண்டும். மனம் அலைபாய வாய்ப்புகள் உள்ளது.

மீனம்:

இன்று ஒரு சிலரை பற்றி புரிந்துக்கொள்வீர்கள். வெகுநாட்களாக சந்தித்த பிரச்சனை ஒன்று நல்ல முடிவைப்பெறும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். நன்மையான நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US