நாளைய ராசி பலன்(21-11-2025)
மேஷம்:
இன்று வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் எல்லாம் விலகும். எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களும் செய்வீர்கள். நீண்ட நாட்களாக மனதில் இருந்த பயம் விலகும்.
ரிஷபம்:
உங்களுக்கு நட்புகள் வழியே சில எதிர்பாராத சங்கடங்கள் வரலாம். சிலருக்கு மதியம் மேல் அலுவலகத்தில் சில எதிர்ப்புகள் வரலாம். உங்கள் சொந்த வாழ்க்கையை பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
மிதுனம்:
உங்களை பற்றி புரிந்து கொள்ளும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் விலகும். கடந்த தவறுகளால் சில மன சங்கடங்கள் சந்திக்கும் நேரும். மதியம் மேல வேலை இடத்தில் கவனம் தேவை.
கடகம்:
பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். வழக்கு விஷயத்தில் சற்று கவனம் தேவை. அத்தை வழி உறவால் இருந்த மன கசப்புகள் விலகி நன்மை பெரும் நாள்.
சிம்மம்:
அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு பொன்னான காலம் ஆகும். நீங்கள் நினைத்ததை அடையும் நாள். வாழ்க்கை துணை உங்களுக்கு முழு ஆதரவும் கொடுப்பார்கள்.
கன்னி:
இன்று தேவை இல்லாமல் ஒரு சில நபரின் பேச்சை கேட்டு தவறான முடிவுகள் எடுக்க நேரலாம். கவனம் தேவை. மதியம் மேல் சற்று சுயநலமாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய நாள்.
துலாம்:
இன்று வேலை பளு அதிகரிக்கும். வீண் அலைச்சல் மற்றும் மன வருத்தத்தை சந்திக்க நேரலாம். வழக்கு விஷயங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகளை பெறுவீர்கள்.
விருச்சிகம்:
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைய நாள். போட்டியாளர்கள் உங்கள் பாதையிலிருந்து விலகுவர். வரவேண்டிய பணம் வரும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும்.
தனுசு:
குழந்தைகள் நலனில் முழுமையான அக்கறை செலுத்துவீர்கள். உங்கள் மனதில் குடும்பத்தினர் மேல் இருந்த கோபம் விலகும் நாள். மனதில் உள்ள கவலைகள் விலகும் நாள்.
மகரம்:
இன்று மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். உங்கள் மனதில் உள்ள குழப்பங்களுக்கு விடை தேடி கொள்வீர்கள். குடும்பம் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.
கும்பம்:
எடுக்கும் முயற்சியில் வெற்றி பெரும் நாள். தொழில் ரீதியாக உங்களுக்கு இருந்த போட்டியாளர்கள் விலகி செல்வார்கள். செல்வாக்கு உயரும் நாள். பண பிரச்சனை விலகும்.
மீனம்:
இன்று கடன் தொல்லை விலகும். நீண்ட நெருக்கடிகளில் இருந்து விலகி செல்வீர்கள். பிள்ளைகளின் மறுமுகத்தை தெரிந்து கொள்வீர்கள். வங்கி தொடர்பான விஷயம் சாதகமாக அமையும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |