10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியில் நுழையும் ராகு- அதிர்ஷ்டம் யாருக்கு?
ஜோதிடத்தில் நிழல் கிரகமாக இருக்கக்கூடியவர் ராகு பகவான். இவருடைய அமைப்பு ஒருவர் ஜாதகத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும். அப்படியாக ஜோதிட கணக்கின்படி ராகு பகவான் டிசம்பர் 2, 2025 அன்று அதிகாலை 2. 11 மணிக்கு அவருடைய ராசியை மாற்றுகிறார். அதாவது தற்பொழுது ராகு பகவான் பூர்வ பாத்ரபாத நட்சத்திரத்தின் முதல் இடத்தில் இருக்கிறார்.
அதே ராகு பகவான் அதே தேதியில் அவர் சதாபிஷ நட்சத்திரத்தின் நான்காவது இடத்தில் நுழைவார். இந்த மாற்றமானது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் நன்மையை செய்யப்போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு ராகு பகவான் இந்த மாற்றம் அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் சாதகமான நிலையை கொடுக்கப் போகிறது. இவர்களுக்கு வேலை செய்யும் இடங்களில் பதவி உயர்வு மற்றும் மிகச் சிறந்த அங்கீகாரம் கிடைக்கப்போகிறது. மனதில் உறுதியும் தன்னம்பிக்கையும் பிறந்து எதையும் தைரியமாக செய்யக்கூடிய நிலை உருவாகும்.
கடகம்:
கடக ராசியினருக்கு ராகு பகவானுடைய இந்த மாற்றமானது அவர்களுடைய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி கொடுக்கப்போகிறது. இவர்கள் இந்த காலகட்டத்தில் தொழில் வாழ்க்கையில் அவர்களுடைய முழு உழைப்பையும் கொடுத்து மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை பெற போகிறார்கள். மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் பிறக்கக்கூடிய காலமாகும்.
மகரம்:
மகர ராசியினருக்கு ராகு பகவானின் இந்த இடமாற்றம் அவர்களுடைய வேலையில் ஒரு நிலையான தன்மையை கொடுக்கப் போகிறது. அதே சமயத்தில் அவர்களுடைய தொழில் வாழ்க்கையில் இவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அங்கீகாரமும் பாராட்டுக்களும் சம்பள உயர்வு பெறப்போகிறார்கள். இவர்களுக்கு சொந்தங்களில் எதிரிகள் தொல்லை இருந்தால் அவர்கள் விலகி இவர்களுடைய வாழ்க்கை ஒரு நல்ல நிம்மதியான நிலையை நோக்கிச் செல்லக்கூடிய அமைப்பு உண்டாகப் போகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |