டிசம்பர் மாதத்தில் வரும் சுப முகூர்த்த நாட்கள் மற்றும் விரதங்கள்
நாம் ஆங்கில வருடத்தின் இறுதி மாதத்தில் இருக்கின்றோம்.பலருக்கும் பலவகையான அனுபவங்களை இந்த ஆங்கில வருடம் கொடுத்திருக்கும்.இன்னும் சில பேர் புத்தாண்டின் வருகைக்காக ஆவளோடு காத்திருக்கின்றனர்.இந்த டிசம்பர் மாதம் பல விசேஷங்களை உள்ளடக்கியது.
அதாவது கார்த்திகை தீபம், பாவை நோம்பு, ஆண்டாள் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள், திருமால் வழிபாடு என புண்ணிய பலன்களை சேர்க்கும் மாதமாக திகழ்கிறது.அப்படியாக இந்த மாதத்தில் என்னென்ன விசேஷங்கள் எந்தெந்த நாட்களில் வருகிறது என்பதை பற்றி பார்ப்போம்.
முக்கிய விசேஷங்கள் :
டிசம்பர் 12-ம் தேதி அதாவது கார்த்திகை 27 அன்று பரணி தீபம் கொண்டாடப்படுகிறது.
டிசம்பர் 13-ம் தேதி கார்த்திகை 28 அன்று மக்கள் அதிகமாக எதிர்நோக்கி இருக்கும் திருக்கார்த்திகை தீபம்.
டிசம்பர் 15-ம் தேதி கார்த்திகை 30 அன்று ஸ்ரீபாஞ்சராத்திர தீபம்.
டிசம்பர் 30-ம் தேதி மார்கழி 15 அன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படும்.
விரத நாட்கள் :
டிசம்பர் 30 அமாவாசை மார்கழி 15
டிசம்பர் 15 பெளர்ணமி கார்த்திகை 30
டிசம்பர் 13 கிருத்திகை கார்த்திகை 28
டிசம்பர் 05 திருவோணம் கார்த்திகை 20
டிசம்பர் 11,26 ஏகாதசி கார்த்திகை 26,மார்கழி 11
டிசம்பர் 06,21 சஷ்டி கார்த்திகை 21, மார்கழி 06
டிசம்பர் 18 சங்கடஹர சதுர்த்தி மார்கழி 03
டிசம்பர் 29 சிவராத்திரி மார்கழி 14
டிசம்பர் 13,28 பிரதோஷம் கார்த்திகை 28,மார்கழி 13
டிசம்பர் 05 சதுர்த்தி மார்கழி 20
அஷ்டமி, நவமி, கரி நாட்கள் :
டிசம்பர் 08 மற்றும் 23 ஆகிய தேதிகளில் அஷ்டமியும் டிசம்பர் 9 மற்றும் 24 ஆகிய நாட்களில் நவமியும் வருகிறது. டிசம்பர் 2, 21, 24, 26 ஆகிய தேதிகளில் கரி நாட்கள் வருகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |