தீபாவளி அன்று செல்வம் சேர்க்கும் குபேர பூஜை

By Sakthi Raj Oct 30, 2024 11:30 AM GMT
Report

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட மக்கள் மிகவும் ஆலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.அப்படியாக வடமாநிலத்தில் தீபாவளி என்றால் அன்று கண்டிப்பாக குபேர பூஜையும் லட்சுமி பூஜையும் செய்து வழிபாடு செய்வார்கள்.

ஆனால் தமிழ் நாட்டில் சில காலங்களுக்கு முன்பு இந்த வழிபாட்டு முறை இல்லை என்றாலும் இப்பொழுது அதிகப்படியாக வீடுகளில் இந்த குபேர பூஜையும் லட்சுமி பூஜையும் செய்யப்படுகிறது.அதன் படி நாம் இப்பொழுது எவ்வாறு இந்த பூஜைகள் செய்யவேண்டும் அவ்வாறு வழிபாடு செய்வதால் வீட்டில் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

நாளை மாலை வழக்கம் போல வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு வழக்கத்தை விட கூடுதலான விளக்கு தீபாவளி அன்று வீட்டில் ஏற்றினால் அவை சிறப்பான பலனை கொடுக்கும்.அந்த தீப ஒளி போல நம்முடைய வீட்டில் மகிழ்ச்சி பிரகாசமாகும் என்பது நம்பிக்கை.

தீபாவளி அன்று செல்வம் சேர்க்கும் குபேர பூஜை | Deepavali Kubera Poojai Vazhipaadu

இனிப்பு பொருட்கள் நெய்வேதியமாக வைக்க வேண்டும். பிராகி கொஞ்சம் அருகம்புல் எடுத்து வந்து நம்முடைய வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு உங்கள் கையில் கையில் குபேர முத்திரை வைக்க வேண்டும். கட்டைவிரல் ஆள்காட்டி விரல் நடுவிரல் இந்த மூன்றையும் சேர்த்து வைப்பது தான் குபேர முத்திரை. இந்த மூன்று விரல்களுக்கும் நடுவே அந்த அருகம்புல்லை வைத்து ‘ஓம் குபேராய வசிய’ என்ற இந்த மந்திரத்தை 1008 முறை சொல்ல வேண்டும்.

தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்ய உகந்த நேரம்

தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்ய உகந்த நேரம்

108 முறை எல்லாம் கணக்கு கிடையாது.சிறப்பு மிகுந்த தீபாவளி நாளில் 1008 முறை இந்த மந்திரத்தை சொல்லி அந்த அருகம்புல்லை கொண்டு நம் வீட்டு பீரோவில் வைத்தால் நிச்சயம் நம் வீட்டின் பண கஷ்டம் விலகி செல்வம் சேறும்.

இந்த அருகம்புல்லுக்கு குபேரரை வசியம் செய்யக்கூடிய தன்மை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறிய எளிய பூஜை செய்து வழிபாடு செய்தால் வெகு விரிவில் நம்முடைய வீட்டில் குபேரன் அருளால் நல்ல செய்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US