தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்ய உகந்த நேரம்
நாளை(31.10.2024)தமிழகம் மற்றும் உலகம் எங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தீபாவளி கொண்டாட காத்திருக்கிறார்கள்.தீபாவளி என்றாலே புத்தாடைகள் மத்தாப்பு இனிப்புகள் இவை தான் நமக்கு முதலில் நியாபகம் வரும்.
மக்கள் காத்திருக்கும் பண்டிகைகளில் தீபாவளி மிக முக்கியமான பண்டிகை.அப்படியாக எந்த ஒரு பண்டிகை என்றாலும் பூஜை செய்யாமல் அது முடிவடையாது.அந்த வகையில் நாளை தீபாவளியை ஓட்டி வீட்டில் லட்சுமி பூஜைக்கான நேரத்தை பார்ப்போம்.
தீபாவளி அன்றி லட்சுமி பூஜைக்கான சுபமுகூர்த்தம் நேரம் பல இருக்கிறது.அந்த நேரத்தில் எந்த நேரம் நமக்கு வசதியாக உள்ளதோ அந்த நேரத்தில் நாம் வீடுகளில் கடைகளிலும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம். இந்த வருடம் தீபாவளி வியாழக்கிழமை அன்று வருகிறது.
அன்றைய தினத்தில் முதல் சுப முகூர்த்த நேரம் மாலை 4.24 மணி முதல் 5.28 மணி என்று அந்த நேரத்தில் நாம் வழிபாடு செய்யலாம்.இரண்டாவது சுப முகூர்த்த நேரம் மாலை 5.48 முதல் இரவு 7.24 மணி வரையில் உள்ள நேரத்தில் நாம் வழிபாடு செய்யலாம்.
அதனை தொடர்ந்து இரவு 7.24 முதல் 8.59 வரையில் உள்ள நேரத்திலும் வழிபாடு செய்யலாம். மேலும் சாஸ்திரநூல்கள் படி தீபாவளி லட்சுமி பூஜையை பிரதோஷ நேரத்தில் கொண்டாடுவது சிறந்த பலனை தரும்.அப்படியாக நாளை பிரதோஷ நேரமானது மாலை 5.48 முதல் இரவு 8.22 வரை இருக்கிறது.
அடுத்ததாக ஸ்திர லக்கினத்தில் லட்சுமி பூஜை செய்வது நமக்கு நல்ல முன்னேற்றமாக அமையும்.அப்படியாக மாலை 6.39 மணி முதல் இரவு 8.37 வரையில் உள்ள நேரத்தில் ரிஷப லக்கினதில் வழிபாடு செய்யலாம்.மேலும் கார்த்திகை அமாவாசை இரவு 12 மணிக்கு பிறகு லட்சுமி பூஜை செய்வதால் கூடுதல் சிறப்பு உண்டாகிறது.
இந்த பூஜை நிசித் காலத்தில் செய்யப்படுகிறது.அதாவது இரவு 1.07 மணி முதல் அதிகாலை3.18 மணி வரை வழி பாடு செய்யலாம்.இவ்வாறு குறிப்பிட்ட இந்த நேரங்களில் வழிபாடு செய்யும் பொழுது நமக்கு லட்சுமி தேவியின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |