பித்ரு தோஷம் உங்களுக்கு இருக்கா? அதன் அறிகுறிகள் இதுதான்
ஒருவருக்கு பித்ரு ஆசிகள் இருந்தால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒருவருக்கு முன்னோர்களின் ஆசி இல்லையென்றால் அவர் வாழ்க்கையில் அதீத சிரமங்களை சந்திப்பார் என்றும் சொல்லப்படுகிறது.
இதை தான் பித்ரு தோஷம் என்று சொல்வார்கள். இந்த தோஷம் இருப்பதற்கான அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்.
பித்ரு தோஷம் இருப்பதற்கான அறிகுறிகள்
திடீரென பணத்தை இழந்துவிட்டீர்கள் என்றால் அது பித்ரு தோஷத்தின் அறிகுறியாகும்.
உணவில் அடிக்கடி முடி இருப்பதை கண்டால் முன்னோர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றும், முன்னோர்கள் பசியோடு இருப்பதையும் இது குறிக்கிறது.
கனவில் முன்னோர்கள் அழுது மன வருத்தம் அடைந்து பேசினால் பித்ருக்கள் கோபமாக இருப்பதற்கு சமம். அதனால் பொருட்கள் தானம் செய்து பித்ரு பூஜை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு இடத்திலும் தனித்துவமான வாசனையை நீங்கள் உணர்ந்தால் அது பித்ருக்கள் வருத்தத்தில் இருப்பதை உணர்த்துகிறது. இதனால் உடனடியாக பூஜை செய்யவேண்டும்.
எந்த வேலை செய்தால் அதில் தடைகள் வந்துகொண்டே இருந்தால் பித்ருக்கள் தோஷமே காரணம். இதற்கு வீட்டிலேயே பித்ரு பூஜை செய்தால் போதும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |