தேவி கருமாரி அம்மனின் சாபத்திற்கு ஆளான சூரியன் நடந்தது என்ன?
திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் பற்றி கேள்வி பட்டு இருப்போம்.மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் பக்தர்களின் குறையையும் இன்னல்களை தீர்த்து கேட்ட வரம் அருளிவருகிறார்.
அப்படியாக சூரியனுக்கு அருளிய அம்பிகை தேவி கருமாரி அம்மன்.அதாவது சூரியனுக்கு அம்பிகை நிகழ்த்தியுள்ள பல்வேறு திருவிளையாடல் இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
ஒரு நாள், அம்பிகை குறி சொல்லும் பெண்ணாக உருவம் எடுத்து அம்பிகை சூரியனிடம் சென்று, நான் உன் எதிர்காலத்தைக் பற்றி கணித்துச் சொல்கிறேன் என்று சொல்ல ,தன்னிடம் குறி சொல்ல வந்து இருப்பது தேவி கருமாரி அம்மன் என்று உணராத சூரியன்,குறி சொல்ல வந்த பெண்ணை உதாசீனப்படுத்தினர்.
இதனால் மிகவும் கோபமடைந்த அம்மன் சூரியனை சபிக்க,சூரியனின் பிரகாசம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது.
மேலும் அம்பிகையின் சாபத்தால் சூரியனின் பெருமையும் குறைந்தது. பல கால சூழ்நிலைகளுக்கு பிறகு தனது தவறை உணர்ந்து கொண்ட சூரியன்,அம்பிகயை மனமுருகப் பிராத்தனை செய்து தன் தவறை மன்னித்து அருளும்படி கேட்டுக்கொண்டார்.
தேவி கருமாரி அம்மனும், சூரியனின் பிரார்த்தனையால் மனம் குளிர்ந்து, மன்னித்தருளினார்.
பிறகு அம்பிகை சூரியனிடம் ஞாயிற்றுக் கிழமையை தனக்கு மிகவும் உகந்த நாளாக ஆக்கிக் கொள்வதாகவும், வருடத்திற்கு இரு முறை, அதாவது, புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில், சூரியோதயத்தின் போது, சூரியனின் பொன்னிறக் கதிர்கள் நேரடியாகத் தன் தலையின் மீது படவும் வரமளித்தார்.
இதன் காரணமாகவே, ஞாயிற்றுக் கிழமை அம்பிகைக்கு மிகவும் உகந்த நாளாக அமைந்துள்ளது.
மேலும், வருடந்தோறும், புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில், சூரியோதயத்தின் போது, சூரியனின் பொன்னிறக் கதிர்கள் நேரடியாக அம்பிகையின் தலையின் மீது படுவதை நாம் கண்டு களிக்க முடிகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |