ஆலயங்களும் அதில் நிறைந்து இருக்கும் அதிசயங்களும்
ஒவ்வோறு கோயில்களுக்கும் ஒவ்வொரு சிறப்புக்கள் இருக்கிறது.அதாவது கோயில்களும் உள்ளே இருக்கும் இறைவனும் ஒரே மாதிரி இருப்பது இல்லை.அப்படியாக ஒவ்வொரு ஆலயங்களுக்கு பின்னாலும் ஒவ்வொரு அதிசயங்கள் நிறைந்து இருக்கிறது.அவை நம்மை மிகவும் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.அதை பற்றி பார்ப்போம்.
1.சிவன் என்றாலே முதலில் நமக்கு நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான்.அப்படியாக திருவண்ணாமலையில் சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருகிறார்.
2.மதுரையில் மட்டும் அல்லாமல் தமிழகத்திலே மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்குவது மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.நம்மில் தன்னை பேர் கோயிலில் உள்ள கோபுரங்களை கவனித்திருக்கின்றோம் என்று தெரியாது.ஆனால் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.
3.கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை.
4.ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது கிடையாது.
5.மூலவரே வீதிவலம் வருவது, சிதம்பரம் நடராஜர் மட்டுமே. 6. மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது.
7.சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம்.
8.சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில்.
9.எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.
10.காசியில் பல்லிகள் இருந்தாலும் ஒலிப்பதில்லை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |