திருப்பதியில் குவியும் பக்தர்கள்.. 36 மணிநேரத்திற்கு பின் சுவாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த இரண்டு தினங்களாக பக்தர்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி
திருப்பதியில் கடந்த வியாழக்கிழமை மாலை முதல் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனர். நேர்த்திக்கடன்களுக்காகவும், தரிசனத்திற்காகவும் வெளி ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
இதனால் அங்குள்ள வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் அறைகள் அனைத்தும் பக்தர்களால் நிரம்பி வழிகின்றதாம்.
இன்றைய தினம் வாரத்தின் இறுதி நாள் என்பதால் பக்தர்கள் அலை மோதிகின்றனர். பக்தர்கள் காத்திருக்கும் வரிசை நீண்டு கல்யாண வேதிகா வரை செல்கிறது.
பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
கோவிலுக்கு வந்த பக்தர்களின் விவரங்கள்
பக்தர்களின் அலைமோதலால் வரிசையில் காத்திருந்த முதியவர்கள் குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எந்த பக்கம் பார்த்தாலும் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது. திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், டீ உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறார்கள்.
நேரடி சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் 36 மணிநேரம் வரை காத்திருந்தாக கூறப்படுகின்றது.
கணிப்பின் பிரகாரம், திருப்பதியில் நேற்று 82,886 பேர் தரிசனமும். 44, 234 பக்தர்கள் முடி காணிக்கையும் செலுத்தியுள்ளனர். அத்துடன் 4.09 கோடி வரை உண்டியல் காணிக்கை வசூலானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |