தமிழர்களின் பெருமைக்காக்கும் சக்தி வாய்ந்த கோயில்களின் பட்டியல் இதோ
தமிழகத்திலுள்ள கோயில்கள் ஆகம விதிமுறைகளை அனுசரித்து இடம், வடிவமைப்பு, மூல மூர்த்தம், பரிவார தேவதைகள், விமானம், ராஜகோபுரம் உள்ளிட்ட அமைப்புகள் சார்ந்தும், நிறைய உள்ளர்த்தங்கள் மற்றும் சமூக நலன் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு அடையாளம் காட்டப்படுகின்றன.
இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட கோயில்களின் தனித்தன்மையை வைத்தே அந்த கோயில்களுக்கு பக்தர்களின் வருகையும் நிர்ணயிக்கப்படுகின்றன.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள தனிச்சிறப்பு பெற்ற கோவில்கள் பற்றிய தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. நாச்சியார் கோவில்
நாச்சியார் கோவிலில் திருவீதி உலா காலங்களில் கல்கருடனை முதலில் 4 பேர் தூக்குவார்கள். அதன் எடையை அதிகரிக்க அதிகரிக்க படிப்படியாக 8, 16 என்று ஆட்கள் அதிகரிப்பார்கள். கோவில் வாசலை நெருங்கும் பொழுது மொத்தமாக 64 பேர் தூக்கி வருவார்கள். அப்போது கல் கருடனின் முகத்தில் வியர்வை துளிகள் இருப்பதை காணலாம் என பக்தர்கள் கூறுகின்றனர்.
2. சிதம்பரம் நடராஜர் கோவில்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உற்சவருக்கு பதிலாக மூலவரே திருவீதி உலா வருவார். இவரின் வருகையே பக்தர்கள் காண்கிறார்கள்.
3. மல்லிகார்ஜுனர் கோவில்
மல்லிகார்ஜுனர் கோவில் தர்மபுரியில் உள்ளது. இந்த கோயிலில் இருக்கும் நவாங்க மண்டபத்தில் இரு தூண்கள் பூமியைத் தொடாமல் நிற்கிறது. இந்த விடயம் அங்கு வரும் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
4. திருநள்ளாறு கோவில்
கும்பகோணம் அருகே திருநல்லூர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் ஒரே நாளில் ஐந்து முறை பல வண்ணங்களில் நிறம் மாறுவதாக கூறப்படுகின்றது. இதனை அடிப்படையாக வைத்து அவரை “பஞ்சவர்ணேஸ்வரர்” என அழைக்கிறார்கள்.
5. திருவெள்ளியங்குடி கோவில்
கும்பகோணம் அருகே உள்ள வெள்ளியங்குடி தலத்தில் கருடாழ்வார் தன்னுடைய நான்கு கரங்களில், இரண்டு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி காட்சி அளிக்கிறார். இந்த கோவில் உள்ள கருடாழ்வாருக்கு தான் இந்த சிறப்பு உள்ளது. மொத்தமாக 108 திவ்ய தேசங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |