தினமும் குளிப்பதற்கு பின்னால் இருக்கும் ஆன்மீக ரகசியங்கள்
மனிதன் தினமும் குளிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அப்படியாக,நாம் தினமும் குளிப்பதற்கு பின்னால் நிறைய காரணங்களும் ரகிசயமும் இருக்கிறது.
அதை பற்றி பார்ப்போம். உலகில் பிறந்த உயிரினங்கள் எல்லாம் கட்டாயம் குளிப்பது என்பது அவசியம்.
அவை நம் உடலில் இருக்கும் அழுக்குகளை மற்றும் போக்குவதில்லை நம்மை சூழ்ந்து இருக்கும் எதிர்மறை ஆற்றலையும் விலக்குகிறது.
அதாவது, நாம் தினமும் வேலைக்கு சென்று வருகின்றோம். அப்போழுது நம் மீது விழும் பார்வையை நம்மால் கணிக்க முடியாது.
அவை நல்ல பார்வையாகவும் இருக்கலாம்,தீய பார்வையாகவும் இருக்கலாம். இவ்வாறு தீய பார்வையால் நாம் சூழும் பொழுது நமக்கு உடல் அசதி,சோர்வு போன்ற விஷயங்கள் உண்டாகும். இவை நாம் பல நேரங்களில் உடலின் தன்மை என்று எடுத்து கொள்கின்றோம்.
ஆனால்,உண்மையில் அவை நாம் வெளியே சென்று திரும்பும் பொழுது நாம் கடந்த வந்த ஆற்றல்கள் பொருத்தும் அமைகிறது. அதனால் தான் அந்த காலங்களில் வெளியே சென்று வீடு திரும்பும் பொழுது குளிக்கவேண்டும்,அல்லது கால்களை கழுவி விட்டு வீட்டிற்குள் வரவேண்டும் என்று சொல்லிருந்தார்கள்.
அதாவது தோஷம் அண்ட முடியாத சக்தி இந்த தண்ணீருக்கு உண்டு. அதே போல் தண்ணீருக்கு எப்பேர்ப்பட்ட கெட்ட ஆற்றலையும் அகற்றக்கூடிய தன்மை கொண்டது. நாம் குளிக்கும் பொழுது நீர் உச்சந்தலையில் படும் பொழுது நம்மை நெருங்கிய கதிர்கள் அனைத்தும் உதிர்ந்து நீரில் அடித்துச் செல்லப் படுகிறது.
ஆதலால் தான் நாம் குளித்து முடித்து வந்தவுடன் உடலும் மணமும் புத்துணர்ச்சியாக உணர்கிறது. மேலும்,நாம் இறந்த வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளித்து விட்டு தான் வீட்டிற்குள் செல்வோம். அதற்கு காரணமும் இது தான்.
ஆக வெளியே சென்று திரும்பும் பொழுது முடிந்தவரை குளித்து விட நாம் மன அழுத்தம் குறையும். இரவிலும் நல்ல உறக்கம் வரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |